மாணவர்கள் சாதியை வெளிப்படுத்தும் பட்டை அணியத் தடை.. நெறிமுறைகளை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை!
சென்னை: பள்ளி மாணவர்களிடையே சாதி வேறுபாடு உணர்வுகளை தடுக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்களின் சாதிப் பெயர்களை எக்காரணம் கொண்டு ஆசிரியர்கள் ரகசியமாக வைக்க வேண்டும் என்றும், மாணவர்களின் சாதியை வருகை பதிவேட்டைல் எக்காரணம் கொண்டு குறிப்பிடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் மதுரையில் நடந்த முருகன் மாநாட்டில் பாஜக நிர்வாகி அண்ணாமலை பேசுகையில், இந்துக்களின் வாழ்வியல் முறைக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் நடந்து கொண்டே இருக்கிறது. பள்ளிகளுக்கு செல்லக் கூடிய குழந்தைகள் கூட நெற்றியில் திருநீறும், கழுத்தில் ருத்ராச கொட்டையும் அணிந்து செல்ல வேண்டும் என்று கூறி இருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

வழிகாட்டு நெறிமுறை
இந்த நிலையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாணவர்களிடையே சாதி மற்றும் சமூக அடிப்படையில் எழும் வன்முறைகளை தவிர்த்து, நல்லிணக்கத்தை உருவாக்கி ஆரோக்கியமான சமுதாயம் உருவாக்கிட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வெளியிட்டுள்ளது. அதன்படி, மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் அவர்களின் சாதி தொடர்பான விவரங்கள் இருக்கக் கூடாது.
பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
அதேபோல் எந்த நேரத்திலும் வகுப்பு ஆசிரியர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவர்களின் சாதியைக் குறிப்பிட்டு மாணவர்களை அழைக்கவோ, மாணவரின் சாதி அல்லது சாதிக்குக் காரணமான தன்மை பற்றி எந்த இழிவான கருத்துக்களையும் தெரிவிக்க கூடாது. அதேபோல், மாணவர்கள் வண்ண மணிக்கட்டு பட்டைகள், மோதிரங்கள் உள்ள எந்த அடையாளங்கள் அணிய கூடாது.
சாதி உணர்வை வெளிப்படுத்தும் சைக்கிள்
அவற்றை மாணவர்கள் அணிவதைத் தடுப்பதற்கான ஆலோசனைகள் பெற்றோருக்கு வழங்கிட வேண்டும். மாணவர்கள் தங்கள் சாதியைக் குறிப்பிடும் அல்லது சாதி தொடர்பான உணர்வுகளை வெளிப்படுத்தும் சைக்கிள்களில் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். இந்த விதிகளைப் பின்பற்றத் தவறினால், அவர்களின் பெற்றோருக்கு அறிவுறுத்துவதோடு கூடுதலாக, தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
செல்போன் பயன்பாடு கூடாது
அதேபோல் சாதி ரீதியாக உணர்வுகளை வெளிப்படுத்தும் மற்றும் அணுகக் கூடிய மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தக்க வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கிட வேண்டும். அதுமட்டுமல்லாமல் பள்ளி வளாகங்களில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதை தடை செய்வது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
நன்நெறி வகுப்புகள்
அனைத்து வகையான பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் நன்நெறி வகுப்புகள் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும். எந்தவொரு மாணவரும் போதைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டால், அந்த மாணவரை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க தலைமையாசிரியர், பெற்றோருக்கு பரிந்துரைத்து மற்றும் சார்ந்த வகுப்பாசிரியர் மாணவரின் முன்னேற்றத்தை கண்காணிக்க வேண்டும்.
உதவி எண்கள்
பள்ளிகளில், மேலும் அதிகளவில் விழிப்புணர்வு பதாகைகள் முக்கியமான இடங்களில் வைக்கப்பட வேண்டும். இந்த பதாகைகளில் Child Helpline 1098 மற்றும் பள்ளிக்கல்வித்துறை உதவி எண் 14417 ஆகிய உதவி எண்கள் குழந்தைகள் எளிதில் படிக்கும் வண்ணம் பெரிய எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டும்.
புகார் அளிக்க வேண்டும்
மாணவர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள், சச்சரவுகள் மற்றும் பாலியல் குற்றங்கள் பற்றி குழந்தைகள் புகார் அளித்தாலோ அல்லது பாலியல் குற்றங்கள் பற்றி தெரிய வந்தாலோ, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உடனடியாக காவல் துறைக்கு புகார் அளிக்க வேண்டும். அவ்வாறு புகார் அளித்தவுடன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு அதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்.
சிசிடிவி கேமராக்கள்
CCTV கண்காணிப்புக் கேமராக்கள் அனைத்துப் பள்ளிகளிலும் குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகள் செல்லும் அறைகள், விளையாட்டு மைதானம், வகுப்பறை முகப்பு, உள்ளே வருவது மற்றும் வெளியே செல்வதற்கான வழிகள் மற்றும் பள்ளி வளாகங்களுக்குள் உபயோகிக்கப்படாமல் இருக்கும் இடங்களிலும் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிடி பீரியட்
அனைத்து வகுப்புகளிலும் விளையாட்டு பாட வேளைகளில் கட்டாயம் மாணவர்கள் விளையாட்டு பயிற்சி ஈடுபடுவதை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். குழு விளையாட்டுக்கள் மூலம் மாணவர்களிடையே வேறுபாடுகளை களையலாம். எனவே பள்ளித் தலைமை ஆசிரியர்கள் குழு விளையாட்டுப் போட்டிகளை பள்ளிகளுக்கு ஏற்றவாறு தெரிவு செய்து விளையாடிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications