Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தட்டித் தூக்குது தமிழக அரசு.. வீடு கட்ட அனுமதிக்கு இனி அலைய வேண்டாம்! சட்டுனு முடியும் வேலை.. எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தூண் தளம் மற்​றும் இரண்டு தளம் கொண்ட 10 மீட்​டர் வரை​யுள்ள குடி​யிருப்பு கட்​டிடங்​களுக்​கும் இத்​திட்​டத்​தின்​கீழ் பதிவுசெய்து உடனடி​யாக கட்​டிட அனு​மதி பெறு​வதற்கு கூடு​தல் வசதி இன்​று ​முதல் நடைமுறைப்​படுத்​தப்பட உள்​ளது. இதனையடுத்து சுயசான்று முறையில், இரண்டு மாடி வரை கட்டடம் கட்டுவதற்கான அனுமதி பெற ஆன்லைன் முறையில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என நகர், ஊரமைப்பு துறையான டிடிசிபி கூறியுள்ளது.

தமிழகத்தில் உள்ள நிலங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்டுவதற்கு கட்டிட அனுமதி பெற வேண்டும். கட்டிடத்தின் பரப்பளவு, உயரம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு உள்ளாட்சி அமைப்புகள், நகர ஊரமைப்பு இயக்கமான டிடிசிபி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான சிஎம்டிஏ ஆகியவை கட்டிட அனுமதியை வழங்கி வருகின்றன.

இந்த நிலையில் கட்டிட அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் தொடர் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் புகார் அனுப்பப்பட்டது. தற்போது அனைத்து அரசு சேவைகளும் இணையவழிக்கு மாற்றப்பட்டு மக்களுக்கு சேவை செய்யப்படும் நிலையில் கட்டட அனுமதி பெறுவதையும் இணைய வழியில் மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

Online Building Approval

கட்டிட அனுமதி

இதை அடுத்து பிப்ரவரி மாதம் இணைய வழியில் கட்டிட அனுமதி பெறுவதற்கான விண்ணப்பிக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்தது. தமிழகத்தில் 2500 சதுர அடி வரையிலான மனையில் 3500 சதுர அடி வரையில் தரைத் தளம் அல்லது தரைத் தளத்துடன் கூடிய முதல் தளம் என கட்டப்படும் குடியிருப்புகளுக்கு சுய சான்று அடிப்படையில் இணைய வழி கட்டட அனுமதி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஆன்லைன் விண்ணப்பம்

இந்த நிலையில் அந்தத் திட்டம் இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில் இணையவழி கட்டட அனுமதி பெற http://www.onlineppa.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும், விண்ணப்பதாரர் தரும் விவரங்களின் அடிப்படையில் கட்டிட வரைபட அனுமதி உடனடியாக வழங்கப்படும் என என நகர ஊரமைப்பு இயக்கமான டிடிசிபி கூறியுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," தலை​மைச் செயல​கத்​தில், வீட்​டு​வசதி மற்​றும் நகர்​புற வளர்ச்​சித் துறை​யின்​கீழ் இயங்​கும் நகர் ஊரமைப்பு இயக்​ககத்​தின் சார்​பில், தமிழகத்​தில் முதல்​முறை​யாக பொருளா​தா​ரத்​தில் நலிவடைந்த பிரி​வினர் மற்​றும் நடுத்தர மக்​கள் ஆகியோர் இணை​யதளம் வாயி​லாக சுய​சான்​றிதழ் அடிப்​படை​யில் பயன் பெறும் வகையில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது.

சுயசான்று கட்டிட அனுமதி

இதன்படி, அதி​கபட்​சம் 2,500 சதுர அடிபரப்​பளவு கொண்ட மனை​யிடத்​தில் 3,500 சதுர அடி அளவுக்​குள் கட்​டப்​படும் தரைத்​தளம் மற்​றும் முதல் தளம் கொண்ட 7 மீட்​டர் வரை​யுள்ள குடி​யிருப்பு கட்​டு​மானத்​துக்கு உடனடி​யாக ஒற்​றைச்​சாளர முறை​யில் கட்​டிட அனு​ம​தி​களைப் பெறும் ஒரு ஒருங்​கிணைந்த புதிய திட்​டத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கடந்​தாண்டு ஜூலை மாதம் தொடங்கி வைத்​தார். தற்​போது இத்​திட்​டத்​தின் மூலம் 1 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் பயனடைந்​துள்​ளனர்.

கட்​டிட அனு​மதி

இத்​திட்​ட​மானது மக்​களிடம் பெறும் வரவேற்​பைப் பெற்​றிருக்​கும் நிலை​யில் இத்​திட்​டத்தை மேலும் பயனுள்​ள​தாக்க 2025-26-ம் ஆண்​டுக்​கான நிதி​நிலை அறிக்​கை​யில் தெரி​வித்​துள்​ள​வாறு, வாகன நிறுத்​து​வதற்​கான சவால்​களை எதிர்​கொள்​ளும் வகை​யில் தூண் தளம் மற்​றும் இரண்டு தளம் (Stilt + 2 Floors) கொண்ட 10 மீட்​டர் வரை​யுள்ள குடி​யிருப்பு கட்​டிடங்​களுக்​கும் இத்​திட்​டத்​தின்​கீழ் பதிவுசெய்து உடனடி​யாக கட்​டிட அனு​மதி பெறு​வதற்கு கூடு​தல் வசதி இன்​று​ முதல் நடை​முறைப்​படுத்​தப்பட உள்​ளது" என கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+