கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் ரூ 25 ஆயிரம் உதவித்தொகை! விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: தமிழக அரசு "தமிழ்நாடு தொல்குடியினர் ஆய்வு உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பழங்குடியினர் குறித்து ஆய்வு செய்யும் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ 25 ஆயிரம் வரை உதவித் தொகை வழங்கப்படும்.
தமிழக அரசு மாணவர்களின் கல்வி, ஆய்வுத் துறையை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதில் ஒன்றாக 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொல்குடியினர் ஆய்வு உதவித்தொகை திட்டம் (Tamil Nadu Fellowship for Tribal Research - TNFTR) அறிமுகமானது.

இந்த திட்டத்தின் மூலம் பழங்குடியினரின் வாழ்க்கை வரலாறு, அவர்களது வாழ்க்கை முறைகள், பண்பாடு, உரிமைகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு மாதாந்திர நிதியுதவி வழங்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மேற்கொள்ளும் இந்த திட்டத்தில், பழங்குடியினர் தொடர்பான ஆய்வுத்துறையை விரிவுபடுத்தும் நோக்கில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
ஆண்டுதோறும் 70 மாணவர்களுக்கு மட்டுமே இந்த உதவித் தொகை வழங்கப்படும். இந்த உதவித் தொகையை பெற யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
யாருக்கு உதவித்தொகை
நடப்பு கல்வியாண்டில் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் அல்லது முனைவர் மேலாய்வு படித்துவரும் மாணவர்கள்.
UG மற்றும் PG மாணவர்கள் - 6 மாத ஆய்வு
Ph.D மற்றும் Post-Doctoral Scholars - 3 வருட ஆய்வு
UG மற்றும் PG மாணவர்களில் 25 பேர், Ph.D மற்றும் மேலாய்வாளர் பிரிவில் 45 பேருக்கு முன்னுரிமை
உதவித்தொகை எவ்வளவு
UG / PG மாணவர்கள்: மாதம் ரூ.10,000
Ph.D / Post-Doctoral Scholars: மாதம் ரூ.25,000
ஆய்வுக்காலம் முழுவதும் இந்த தொகை வழங்கப்படும்.
தகுதிகள் என்ன
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவராக இருக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
பழங்குடியினரைப் பற்றி ஆய்வு செய்யத் திட்டமிட்டிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி
அதிகாரப்பூர்வ இணையதளம்: Fellowship.tntwd.org.in
இணையதளத்தில் உள்ள வழிகாட்டுதல்கள், நிபந்தனைகள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து படித்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப பதிவு நவம்பர் 12 முதல் தொடங்கியுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 12.
பழங்குடியினர் சமூகத்தின் பண்பாடு, வரலாறு மற்றும் உரிமைகளைப் பற்றிய ஆழமான ஆய்வு செய்ய விரும்பும் மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு.
கல்வியையும், ஆய்வையும் இணைக்கும் இந்த உதவித் தொகை பலருக்கு பயனளிக்கக்கூடியது. மாணவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் உடனடியாக விண்ணப்பிக்கலாம்!












Click it and Unblock the Notifications