Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேரூராட்சிகளில் பறக்கும் "காவிக் கொடி".. தனித்து போட்டியிட்டதற்கான பாஜகவின் அறுவடையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சிகளை பொருத்தமட்டில் பாஜக கணிசமான வளர்ச்சியை பெற்றுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்தது.

இந்த தேர்தலில் தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அவற்றில் உள்ள 12,838 வார்டுகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணிக்கை

இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. அதில் மதியம் 1.45 மணி நிலவரப்படி மாநகராட்சிகளில் திமுக 289 வார்டுகளிலும் அதிமுக 49 வார்டுகளிலும் , காங்கிரஸ் 25 வார்டுகளிலும் சிபிஎம் 11 இடங்களிலும் கம்யூனிஸ்ட் 2 இடங்களிலும் பாஜக 3 இடங்களிலும் வென்றுள்ளது.

 நகராட்சிகள்

நகராட்சிகள்

நகராட்சிகளில் திமுக 1211 வார்டுகளிலும், அதிமுக 320 இடங்களிலும் காங்கிரஸ் 80 இடங்களிலும், பாஜக 29 இடங்களிலும் சிபிஎம் 20 இடங்களிலும் சிபிஐ 10 இடங்களிலும், தேமுதிக 5 இடங்களிலும் வென்றுள்ளது. அது பேரூராட்சிகளை எடுத்துக் கொண்டால் திமுக 3782 வார்டுகளிலும் அதிமுக 1070 இடங்களிலும் காங்கிரஸ் 258 இடங்களிலும் பாஜக 132 இடங்களிலும் சிபிஎம் 58 இடங்களிலும், சிபிஐ 22 இடங்களிலும் தேமுதிக 18 இடங்களிலும் பகுஜன் சமாஜ் ஒரு இடத்திலும் வென்றுள்ளது.

4ஆவது இடத்தில் பாஜக

4ஆவது இடத்தில் பாஜக

பேரூராட்சிகளில் அதிமுக, திமுக முதல் இரு இடங்களில் உள்ளன. காங்கிரஸ் மூன்றாவது இடத்திலும் பாஜக 4 இடத்திலும் உள்ளது. பேரூராட்சியில் கிட்டத்தட்ட 100 வார்டுகளை தாண்டி வென்றுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவின் முதுகில் சவாரி செய்து 4 இடங்களில் பாஜக வென்றதாக விமர்சனங்கள் எழுந்தன.

ஊரக உள்ளாட்சி தேர்தல்

ஊரக உள்ளாட்சி தேர்தல்

இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட பாஜக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 8 வார்டுகளில் மட்டுமே பாஜக வென்றது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றும் பாஜகவுக்கு 8 இடங்களே கிடைத்தன.

இடப்பங்கீடு

இடப்பங்கீடு

இந்த நிலையில் இடப்பங்கீட்டில் பிரச்சினை எழுந்ததால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று வெளியாகி வருகிறது. மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை பின்னுக்கு தள்ளிவிட்டது பாஜக. இதனால் பாஜக தமிழகத்தில் ஓரளவு வளர்ச்சி அடைந்ததாகவே பார்க்கப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் என்பது கட்சியை தாண்டி உள்ளூர் வேட்பாளரின் செல்வாக்கை பொறுத்து என்பதால் இந்த வெற்றியை வைத்து பாஜகவின் செல்வாக்கை கூறிவிட முடியாது. எனவே வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் தனித்து போட்டியிட்டால் மட்டுமே அதுகுறித்து ஒரு முடிவுக்கு வர முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+