புத்தாண்டில் காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்.. 1500 ஆகும் மகளிர் உரிமை தொகை? லிஸ்ட் ரெடியாகுது மக்களே!
சென்னை: தமிழ்நாடு அரசி சார்பில் தமிழகத்தில் தற்போது ஒரு கோடிக்கும் அதிகமான குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் இந்த எண்ணிக்கை கூடுதலாக்கப்படும் எனவும், 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக மகளிர் உரிமைத்தொகை உயர்த்தி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் உலாவுகின்றன..
திமுக தலைவராக முதன்முறையாக தேர்தலைச் சந்தித்த மு.க.ஸ்டாலின் வெற்றி பெற முக்கிய காரணம், அவர் அறிவித்த மகளிருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம் தான்.

தமிழகம் முழுவதும் பெரிய அளவில் இந்த திட்டம் பேசப்பட்டது. ஏன் இந்தியா முழுமைக்குமே முன்னோடி திட்டமாக இது கருதப்பட்டது. இதேபோல் அதிமுகவும் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கும் என அறிவித்தது.
மு.க.ஸ்டாலின்:
திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஆயிரம் ரூபாய் உதவித் தொகை குறித்து பெரும்பாலும் பேசினார். இதேபோல திமுக மகளிர் அணி செயலாளர் இருந்த கனிமொழி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் தங்கள் பிரச்சாரத்தின் போது இந்த திட்டத்தை மக்களிடம் அதிக அளவில் கொண்டு சென்றனர். எதிர்பார்த்தது போல திமுக பெருவெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தொடர்ந்து மகளிர் உரிமைத்துறை திட்டத்தில் சுமார் ஒரு கோடியே 16 லட்சம் பயனாளிகள் பயன்பெற்றனர்.
மகளிர் உரிமைத் தொகை:
மேலும் புதிதாக திருமணமானவர்கள், புதிய குடும்ப அட்டை பெற்றவர்கள், கல்லூரி படிப்பை முடித்தவர்கள் என மாதம் தோறும் ஆயிரக்கணக்கில் மகளிர் உரிமைத்தொகைக்காக புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான பட்டியல் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
பயனாளிகள் எண்ணிக்கை:
இந்த நிலையில் அரசின் விதிமுறைகள் பொருந்தாததால் தற்போது சுமார் ஒரு லட்சத்து 27 ஆயிரம் பயணிகள் உரிமை தொகை திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 15 லட்சத்திலிருந்து ஒரு கோடியே 14 இலட்சமாக குறைந்து இருக்கிறது.
கூடுதல் பயனாளிகள்:
அதிக வருமானம், நிலம் வாங்குதல், அரசு பணிகளில் சேர்ந்தவர்கள், உயிரிழப்பு உள்ளிட்ட காரணங்களால் பயனாளிகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாகவும், பயனாளிகளின் வங்கி கணக்குகள், நிலப்பதிவுகள் , வருமான வரி கணக்குகள், வாகனப்பதிவு ஆகியவை டிஜிட்டல் முறையில் சமூக பாதுகாப்பு ஆணையரால் கண்காணிக்கப்பட்ட நிலையில் இந்த நீக்கம் இருப்பதாக தமிழக அரசு அறிவித்தது. மேலும் கடந்த அக்டோபரில் இந்த திட்டத்தின் கீழ் 1,140 கோடி வழங்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியிருந்தனர்.
தமிழக பட்ஜெட் 2025:
இந்த எண்ணிக்கை கூடுதல் ஆக்கப்படும் எனவும், ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக மகளிர் உரிமைத்தொகை உயர்த்தி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் உலாவுகின்றன. 2025-2028ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு அது தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
உயர்த்தப்படும் உரிமைத் தொகை:
இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு மாதம் தோறும் மின் கட்டணம், கல்வி கடன் ரத்து, மகளிர் உரிமைத்தொகை அதிகரிப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் பெட்ரோல் விலை குறைப்பு, சிலிண்டர் மானியம், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்டவை குறித்த அறிவிப்பு இருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.
திமுக அரசு 4வது பட்ஜெட்:
தற்போது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நான்காவது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. 2026-ல் இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்யப்படும் என்பதால் வரும் பட்ஜெட் கவனம் பெற்று இருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசுக்கு பின்னால் மகளிர் உரிமைத்தொகை அறிவித்த பல மாநிலங்களில் 1500 ரூபாய், 2000 ரூபாய், 2500 ரூபாய் என வழங்கப்படுகிறது.
பட்ஜெட் எதிர்பார்ப்பு:
ஆனால் இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த திட்டத்தை அறிவித்த தமிழக அரசு ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கி வருகிறது. எனவே 2026 சட்டமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு மகளிர் உரிமைத் தொகை 1500 ரூபாயாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல ஏற்கனவே ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்தவர்கள், மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள், மேல் முறையீடு செய்தவர்கள் மட்டுமல்லாடு அனைத்து மகளிருக்கும் மகளிர் உரிமைத் தொகை என்பன உள்ளிட்ட பல அறிவிப்புகள் இதில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
கோவை மக்களுக்கு ஜாக்பாட்! பல மாத காத்திருப்புக்கு விடிவுகாலம்.. மெகா திட்டத்திற்கு கிரீன் சிக்னல்! -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications