இது லிஸ்ட்லயே இல்லையே! கண்ணசைத்த மோடி.. தமிழ்நாட்டின் 2 முக்கிய புள்ளிகளை தூக்கும் டெல்லி! பாஜக குஷி
சென்னை: தமிழ்நாட்டில் இரண்டு முக்கியமான புள்ளிகளை தூக்கும் முடிவில் பாஜக தேசிய தலைமை இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் ஒரே பேச்சாக இருக்கிறது. இது பற்றி தமிழக பாஜக வட்டாரத்தில் விசாரித்ததில் பல சுவாரசிய தகவல்கள் கிடைத்தன.
Recommended Video
தமிழ்நாடு அரசியல் தற்போது ஆளுநர் ரவி - முதல்வர் ஸ்டாலின் இடையிலான மோதலால் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இது போக வரப்போகும் ராஜ்ய சபா எம்பி தேர்தலால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
இதில் திமுக யாரை எம்பியாக தேர்வு செய்யும், ஏற்கனவே எம்பியாக இருக்கும் நபர்களுக்கு ஆளும் திமுக வாய்ப்பு வழங்குமா அல்லது புதிய முகங்கள் களமிறக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாஜக எம்பி
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் இருந்து பாஜகவும் எம்பிக்களை தேர்வு செய்ய போகிறதாம். தமிழ்நாடு பாஜகவில் மொத்தம் 4 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். இந்த பலத்தை வைத்து ராஜ்ய சபாவிற்கு எம்பிக்களை அனுப்பி முடியாது. ராஜ்ய சபாவிற்கு எம்பிக்களை அனுப்ப ஒரு கட்சிக்கு குரைந்தது 35 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. இதனால் பாஜக நேரடியாக எம்பிக்களை ராஜ்யசபாவிற்கு அனுப்பி முடியாது.

அதிமுக உதவாது
அதிமுகவிடம் எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. ஆனால் அந்த எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு ஆதரவு தர வாய்ப்பு இல்லை. அதிமுகவிலேயே எம்பி பதவிக்கு பலர் போட்டியிடுவதால் பாஜக இந்த இடங்களை பெற வாய்ப்பே இல்லை. இந்த நிலையில்தான் டெல்லி பாஜக புதிய திட்டம் ஒன்றை போட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி பொதுவாக குடியரசுத் தலைவர் 12 பேரை ராஜ்ய சபாவிற்கு எம்பிக்களாக நியமிக்க முடியும்.

பாஜக பிளான்
பல்வேறு துறையில் சிறப்பாக செயல்படும் நபர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு எம்பி பதவி வழங்க முடியும். பல பிரபலங்கள் இப்படி எம்பி ஆகி இருக்கிறார்கள். ஆனால் பொதுவாக தமிழ்நாட்டில் இருந்து பெரும்பாலும் இந்த பதவிக்கு பலர் தேர்வாவது இல்லை. பெரும்பாலும் வடஇந்திய பிரபலங்கள்தான் இப்படி எம்பி பதவிக்கு தேர்வாகி இருக்கிறார்கள். ஆனால இந்த முறை தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

மோடி விருப்பம்
தமிழ்நாட்டில் இருந்து இரண்டு பேரை தேர்வு செய்ய பிரதமர் மோடி விரும்புவதாக கூறப்படுகிறது. 2 முக்கியமான பிரபலங்களை இதற்காக பாஜக டிக் அடித்து இருக்கிறதாம். முதலில் 3 பேரை தேர்வு செய்ய விரும்பியதாகவும், ஆனால் மற்ற மாநிலத்தை சேர்ந்த சிலரை தேர்வு செய்ய முடியாமல் போகும் என்பதால் அந்த முடிவு கைவிடப்பட்டதாகவும், இதனால் 2 தமிழர்களை குடியரசுத் தலைவர் எம்பியாக தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

என்ன நடக்கும்?
இவர்கள் இருவரும் பாஜக கட்சியை சார்ந்தவர்கள் அல்ல. ஆனால் கொள்கை ரீதியாக பாஜகவோடு நெருக்கமானவர்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல் இரண்டு பேருமே மக்கள் மத்தியில் நெருக்கமாக இருக்கும் பிரபலங்கள் என்று கூறப்படுகிறது. இரண்டு பேரின் பெயரும் ரகசியமாக வைக்கப்பட்டு இருக்கிறது. எம்பி தேர்தல் சமயத்தில் பெயர்கள் வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்!












Click it and Unblock the Notifications