நாசர் மகன் ஆசிம் ராஜா நீக்கப்பட்டதன் பின்னணி? புகார் சொன்னது யார்? திமுகவில் சொல்லப்படுவது என்ன?
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சியின் தி.மு.க மாநகரச் செயலாளர் பொறுப்பிலிருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசரின் மகன் ஆசிம் ராஜா நீக்கப்பட்டதன் பின்னணி என்ன என்பதை பார்ப்போம்.
சென்னை: திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சியின் தி.மு.க மாநகரச் செயலாளர் பொறுப்பில் அமைச்சர் நாசரின் மகன் ஆசிம் ராஜா நீக்கப்பட்டதன் பின்னணி என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
மாநகராட்சி நிர்வாகத்தில் ஆசிம் ராஜா தலையீடு அதிகமாக இருந்ததால் அவர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டதாக திமுக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இது உண்மையாக என்பது ஆசிம் ராஜாவே விளக்கம் அளித்தால் தான் தெரியவரும்.
திருவள்ளூர் மத்திய மாவட்டம், ஆவடி மாநகரக் கழகச் செயலாளர் எஸ்.என்.ஆசிம் ராஜாவை மாநகரக் கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக சன்.பிரகாஷ் அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருப்பதாக' திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டார். இது தொடர்பான அறிவிப்பு பிப்ரவரி 7-ம் தேதி முரசொலியில் வெளியானது.

ஆவடி நாசர்
தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி எஸ்.எம்.நாசரின் மகன் ஆசிம் ராஜா திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட திமுக ஆவடி மாநகரச் செயலாளராக செயல்பட்டு வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற திமுக உட்கட்சி தேர்தலில் ஆசிம் ராஜா ஆவடி மாநகர செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஆசிம் ராஜா, ஆவடி மாநகராட்சி கவுன்சிலராகவும், மண்டலக்குழு தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.'

நீக்கம் ஏன்?
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்த குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் படங்களை அமைச்சர் ஆவடி நாசரின் மகன் ஆசிம் ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் கும்பலாகச் சென்று அகற்றியதாக சமீபத்தில் பாஜக சார்பில் போலீசில் புகார் அளித்திருந்தனர். இந்த சூழலில் ஆவடி மாநகரக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்து எஸ்.என்.ஆசிம் ராஜா நீக்கப்பட்டார். வெறும் ஐந்து மாதத்தில் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

பட்டியல் பிரிவு
இது தொடர்பாக திமுக வட்டாரங்களில் கூறப்படுவதாவது: பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் மகனான ஆசிம் ராஜா கவுன்சிலர், மாநகரச் செயலாளர், மாநகராட்சிப் பணிகள் குழுத் தலைவர், மண்டலப் பொறுப்பாளர் என ஆவடியில் கட்சி ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் அனைத்து முக்கியப் பொறுப்புகளையும் வகித்து வருகிறார். இந்த சூழலில் ஆவடி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டதும் ஆசிம் ராஜா தான் மேயராவார் என எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் ஆவடி மாநகராட்சியைப் பட்டியலின பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் மேயராவது நடக்கவில்லை.

புகார்கள் எழுந்தன
அதேநேரம் மாநகராட்சியில் முக்கிய முடிவுகளை ஆசிம் ராஜாதான் எடுப்பதாக கூறப்படுகிறது. மேயர் பொறுப்பில் உதயகுமார் இருந்தாலும ஆசிம் கட்டுப்பாட்டில் தான் ஆவடி மாநகராட்சி இருப்பதாக எதிர்க்கட்சியினர் தரப்பில் புகார்கள் எழுந்தது. மாநகராட்சியில் வரும் டெண்டர்கள் தொடங்கி வேலைகள் வரை அனைத்திலும் அமைச்சர் மகன் என்பதால் அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் தான் ஆசிம் ராஜா பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டதாக நீக்கப்பட்டதாக திமுக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. அதேநேரம் ஆவடி திமுகவினரே ஆசிம் ராஜா மீதான குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுக்கிறார்கள். ஆனால் இது குறித்து ஆசிம் ராஜா தரப்பில் இருந்து விளக்கம் வந்தால் தான் தெரியவரும்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications