தொலைபேசியில் முன்னாள் முதல்வர்... கருணை காட்டிய விஜய பாஸ்கர்... பறந்த ஆம்புலன்ஸ்!!
சென்னை: கேரளாவில் கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு பிறந்த குழந்தைக்கு முதுகு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது இருப்பதால் அதற்கான உதவிகளை செய்யுமாறு கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி கேட்டுக் கொண்டார். இதை ஏற்று உடனடியாக அமைச்சர் விஜய பாஸ்கர் ஏற்பாடு செய்து கொடுத்தார்.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் அடூரைச் சேர்ந்தவர் ஜார்ஜ். இவரது மனைவி டீனா. இவர்களுக்கு அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு முதுகு தண்டுவடத்தில் கோளாறு இருந்துள்ளது. இதற்கு தமிழகத்தில் வேலூரில் இருக்கும் சிஎம்சி மருத்துவமனையில்தான் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக தற்போது மாநிலத்தில் இருந்து மாநிலம் செல்வதற்கு தடை இருக்கிறது. செல்ல வேண்டுமானால் இ பாஸ் எடுத்துக் கொண்டுதான் செல்ல வேண்டும்.
இதையடுத்து அந்தக் குழந்தையின் பெற்றோர் வேலூர் கொண்டு செல்ல உதவ வேண்டும் என்று முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியிடம் கேட்டுக் கொண்டனர். அவரும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் பாஸ்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவுமாறு கேட்டுக் கொண்டார். இதை ஏற்று உடனடியாக அந்தக் குழந்தையை வேலூர் கொண்டு வருவதற்காக ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தார் விஜய் பாஸ்கர்.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு குழந்தையுடன் பெற்றோரும் ஆம்புலன்சில் அடூரில் இருந்து புறப்பட்டனர். 16ஆம் தேதி இரவு 10 மணிக்கு புறப்பட்ட ஆம்புலன்ஸ் 17ஆம் தேதி காலை, அதாவது பத்து மணி நேரத்தில் 700 கி.மீட்டர் தொலைவைக் கடந்து மின்னல் வேகத்தில் வேலூர் வந்து சேர்ந்தது.
Recommended Video
தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கும் குழந்தைக்கு எந்த நேரத்திலும் சிகிச்சை துவங்கப்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications