அப்படிபோடு.. விரிவாக்கப்பட்ட தாம்பரம், ஆவடி மாநகராட்சிகள்.. புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகள் எவை?
சென்னை: சென்னைக்கு அருகில் உள்ள தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகள் விரிவாக்கப்பட்டு உள்ளன. 37 கிராம பஞ்சாயத்துகளை இணைக்கும் வகையில், அவற்றின் எல்லைகளை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேடவாக்கம், கோவிலம்பாக்கம், கவுல்பஜார், முடிச்சூர், திருவேற்காடு, பூந்தமல்லி, திருநின்றவூர் போன்ற பல பகுதிகள் இதனால் பயன் அடைய போகின்றன. டிசம்பர் 2024 அல்லது ஜனவரி 2025க்குள் இந்த விரிவாக்கத்திற்கான பணிகள் மொத்தமாக முடிவு அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று தமிழ்நாடு முழுக்க பல மாநகராட்சிகள், நகராட்சிகள் நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டன. அரியலூர் நகராட்சி, செங்கல்பட்டு நகராட்சி, மன்னார்குடி, திருவாரூர் மற்றும் விருதுநகர் நகராட்சிகள், பொன்னேரி, ஆரணி, திருவதிபுரம் & வந்தவாசி நகராட்சிகள் என்று பல மாநகராட்சி மற்றும் நகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்பட்டன.

நேற்று சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்படவில்லை. மாறாக சென்னைக்கு அருகில் உள்ள தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகள் விரிவாக்கப்பட்டு உள்ளன. நாசரேத்பேட்டை, அகரம் மேல், பணவீடு தோட்டம், பாரிவாக்கம், கண்ணபாளையம், சோரஞ்சேரி, திருசூலம், ஒட்டியம்பாக்கம், திருவாஞ்சேரி, வெங்கைவாசல், மதுரப்பாக்கம் போன்ற பல பகுதிகள் இதனால் பயன் அடைய போகின்றன.
தாம்பரம் மாநகராட்சி விரிவாக்கம்: அதன்படி, தாம்பரம் மாநகராட்சியில் அகரம்தென், மேடவாக்கம், கோவிலம்பாக்கம், கவுல்பஜார், முடிச்சூர், பெரும்பாக்கம், நன்மங்கலம், பொழிச்சலூர், திருசூலம், ஒட்டியம்பாக்கம், திருவாஞ்சேரி, வெங்கைவாசல், மதுரப்பாக்கம், மூவரசம்பட்டு, மூவரசம்பட்டு உள்ளிட்ட 18 கிராமங்கள் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தாம்பரம் மாநகராட்சி 84.7 சதுர கிமீ அளவில் இருந்து 172.34 சதுர கிமீ வரை வளரும், இது கிரேட்டர் சென்னை மாநகராட்சியின் நான்கில் ஒரு பங்கு அளவு. இணைப்பின் மூலம் அதன் மக்கள் தொகை 7,23,017ல் இருந்து 10,08,473 ஆக உயரும். 2019 ஊரக உள்ளாட்சித் தேர்தலின் காரணமாக மாநகராட்சி அமைக்கப்பட்டபோது முதலில் விலக்கப்பட்ட ஊராட்சிகளைச் சேர்க்கும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் முன்மொழிவுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக துணை மேயர் ஜி.காமராஜ் தெரிவித்து உள்ளார்..
ஆவடி மாநகராட்சி விரிவாக்கம்; ஆவடி மாநகராட்சிக்கு, திருவேற்காடு, பூந்தமல்லி, திருநின்றவூர் ஆகிய 3 பேரூராட்சிகளும், வானகரம், அயப்பாக்கம், நெமிலிச்சேரி, அடையாலாம்பட்டு, நடுகுத்தகை, காட்டுப்பாக்கம், சென்னீர்குப்பம், வரதராஜபுரம், பாரிக்காடு, பாரிக்காடு, நாசரேத்பேட்டை, அகரம் மேல், பணவீடு தோட்டம், பாரிவாக்கம், கண்ணபாளையம், சோரஞ்சேரி ஆகிய பகுதிகள் இணைக்கப்பட்டு உள்ளன.
மேலும் மோரை, வெள்ளனூர், பழவேடு, மேப்பூர், ஆகிய 19 கிராம ஊராட்சிகளுடன் இணைக்கப்படும். , சோரஞ்சேரி, மோரை, வெள்ளனூர், பழவேடு, மற்றும் மேப்பூர். இந்த இணைப்பின் மூலம் ஆவடி மாநகராட்சி 65 சதுர கிலோ மீட்டரில் இருந்து 188 சதுர கிலோ மீட்டராக விரிவடைந்து அதன் மக்கள் தொகை 3,45,996லிருந்து 6,95,212 ஆக அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் டி.கார்த்திகேயன் கூறியதாவது: கிராம பஞ்சாயத்து தலைவர்களின் பதவிக்காலம், 2024ம் ஆண்டு இறுதி வரை, அதன் பின், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளில் பஞ்சாயத்துகள் இணைக்கப்படும். டிசம்பர் 2024 அல்லது ஜனவரி 2025க்குள் இந்த விரிவாக்கத்திற்கான பணிகள் மொத்தமாக முடிவு அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications