சென்னையில் வீடு வீடாக நிலவேம்பு கசாயம் வழங்குக! மாநகராட்சிக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வேண்டுகோள்!
சென்னை: சென்னையில் வீடு வீடாக நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அதன் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
''வடகிழக்கு பருவமழை காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு என்பது கடந்த சில வாரங்களாகவே தமிழகம் முழுவதும் அதிகரித்துள்ளது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வடகிழக்கு பருவமழை தற்போது மேலும் தீவிரம் அடைந்திருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகப்படியான மழை பெய்துள்ளது. அதுமட்டுமின்றி சென்னை தண்ணீர் வழங்கக்கூடிய ஏரிகள் நிரம்பி, அதில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால், சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
அதுமட்டுமின்றி, வீடுகளுக்கும் மழை நீர் புகுந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உணவு, தண்ணீர் இல்லாமல் சென்னையின் பல பகுதிகளில் மக்கள் தவித்து வருகின்றனர். மழைகால நிவாரண முகாம்களை முன்கூட்டியே அமைத்திருந்தால் பொதுமக்களின் இந்த சிரமத்தை தமிழக அரசு தவிர்த்து இருக்க முடியும்.
ஆனால், தி.மு.க. அரசு மெத்தனமாக இருந்துவிட்டதன் காரணமே, மழையால் மக்கள் இந்த அளவிற்கு இன்னல் அனுபவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இனியும் தாமதப்படுத்தாமல் போர்க்கால அடிப்படையில் மழை நீரை வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டு, மக்களின் இன்னலை போக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
அதேபோல, மழை நீரால் ஏற்பட்டக்கூடிய நோய்தொற்றில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு, அதிகப்படியான மருத்துவமுகாமை நடத்து வேண்டுமெனவும் தமிழக சுகாதாரத்துறையை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். அதுமட்டுமின்றி, காய்ச்சல்களில் இருந்து மக்களை முன்னெச்சரிக்கையாக காக்கும் வகையில், வீடு வீடாக சென்று நிலவேம்பு கசாயம் மேற்கொள்ளும் பணிகளை மழை பெய்யும் மாவட்டங்களில் மேற்கொள்ள தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.'
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications