ரேஷன் அட்டைதாரர்களே.. புது ரேஷன் கார்டுக்கு அப்ளை பண்ணிட்டீங்களா.. ஆபீசர்களுக்கு பறந்த மெயின் உத்தரவு
சென்னை: ரேஷன் அட்டைகள் தொடர்பாக, அரசு அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.. இதற்கான பணிகளும் ஆரம்பமாகி உள்ளது.
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன..

இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே ஏராளமான பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகின்றன.. அதேபோல, பொங்கல் பரிசு உள்ளிட்ட நிதியுதவிகளும் அரசின் மற்ற நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கார்டு மூலமாக வழங்கப்படுகின்றன.
ரேஷன் கார்டுகள்: மற்றொரு புறம், ரேஷன் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், செல்போன் பதிவு எண்ணை மாற்றுதல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவித்தல் போன்றவைகள் குறித்தும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ள தமிழக அரசினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு, உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் வி.ராஜாராமன், ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதில், பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள பொது விநியோகத் திட்ட பொருள்களைக் கடத்துவதும், பதுக்குவதும் குற்றமாகும். இந்தக் குற்றத்தைச் செய்யும் நபர்கள் மீது கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் சட்டம் 1980-இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
இந்த நிலையில், பொது விநியோகத் திட்டப் பொருள்கள் கடத்தல் மற்றும் பதுக்குதல் தொடர்பான புகார்களை 1800 599 5950 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
ஸ்மார்ட் ரேஷன் கார்டு: இப்போது இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது.. ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 15 நாட்களுக்குள், ஸ்மார்ட் ரேஷன் கார்டு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.. அதன்படி, நீங்கள் எந்த மாநிலத்தில் வசிக்கிறீர்களோ அதே மாநிலத்தில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதேநேரம், ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பததாரரின் பெயர் வேறு எந்த ரேஷன் கார்டிலும் இருக்க கூடாது. குடும்பத்தின் வருவாயை பொறுத்து ரேஷன் கார்டு 5 வகையாக வழங்கப்படுகிறது.
புதுமண தம்பதிகள்: புதிதாக திருமணமானவர்கள், கூட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் தனியாக பிரித்து புதிய கார்டு வாங்க, உங்களது பழைய ரேஷன் கார்டில் உள்ள உங்கள் பெயரை நீக்க வேண்டும். இதற்காக சரியான ஆவணங்களை (திருமண பதிவு சான்று அல்லது பிற சான்றுகள்) கொடுத்து ஆன்லைன் மூலம் நீக்கிக் கொள்ளலாம்.
அந்தவகையில், பலரும் புதிய ரேஷன் கார்டை பெற முயற்சித்து வருகின்றனர்.. குறிப்பாக 35 வயத்திற்குள் உள்ள இளம் தம்பதியினர் மற்றும் புதிதாக திருமணம் முடிந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்து வருகின்றனர்.. ஆனால், புதிதாக திருமணம் ஆனவர்கள் தங்களது பெற்றோர்களுடன் ஒரே வீட்டில் வசித்து கொண்டு, புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிப்பது தற்போது தெரிய வந்துள்ளது...
முக்கிய உத்தரவு: இதற்காகத்தான், முக்கிய உத்தரவினை அரசு அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ளது.. ஒரு மாதத்தில் ரேஷன் கார்டு வேண்டி சராசரியாக 50 முதல் 60 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.. இவற்றில் தகுதியுடையோர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்கள் தகுதியானவர்களா? என்பதை ஆய்வு செய்து அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications