நம்பர் 1 தமிழ்நாடு.. உச்சத்தில் நம்ம மாநிலம்.. வாயை பிளக்கும் குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா!
சென்னை: இந்தியாவின் மின்னணு உற்பத்தித் துறையில் சுமார் 26% பங்களிப்புடன், தமிழ்நாடு மின்னணு வளர்ச்சியில் முன்னணியில் உள்ளது. இம்மாநிலத்தின் மின்னணு ஏற்றுமதி மதிப்பு $14.65 பில்லியன் ஆகும்.
2025 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் 41.23% பங்களிப்புடன், தமிழ்நாடு நாட்டின் முதன்மையான மின்னணு ஏற்றுமதி மாநிலமாகத் திகழ்கிறது. உலகளாவிய அளவில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இங்கு இயங்கி வருகின்றன.

நீண்டகாலமாகவே மின்னணு உற்பத்தி மையமாகச் செயல்பட்டு வரும் தமிழ்நாடு, தற்போது தனது விரிவான செமிகண்டக்டர் திட்டம் 2030 மூலம் செமிகண்டக்டர் துறையிலும் தலைமையாக உயரத் தயாராகி வருகிறது.
தமிழ்நாடு நம்பர் 1
இதன் மூலம் மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் மீண்டும் தமிழ்நாடு முதலிடம் பிடித்து சாதனை படைத்து உள்ளது. கர்நாடகா 4.95 பில்லியன் டாலர்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா முறையே 3.78 பில்லியன் டாலர் மற்றும் 2.72 பில்லியன் டாலர்களைப் பதிவு செய்துள்ளது. 2024 டிசம்பரில், தமிழ்நாட்டின் ஏற்றுமதி நவம்பரில் $1.534 பில்லியனில் இருந்து 1.524 பில்லியன் டாலராக சிறிது சரிவைக் கண்டது, ஆனாலும் மாநிலம் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
நம்பர் 1 தமிழ்நாடு
ஏற்கனவே கடந்த 2023-24 நிதியாண்டில் 32.84% மொத்த பங்குடன் 9.56 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த எண்ணிக்கை வெறும் 1.86 பில்லியனாக இருந்தது. இது தமிழ்நாடு ஏற்றுமதியின் எண்ணிக்கை இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் 39% ஆகும்.
அதே காலகட்டத்தில் இந்தியாவில் மொத்தமாக செய்யப்பட்ட மின்னணு ஏற்றுமதியை $16.48 பில்லியன் ஆகும். கடந்த வருடம் ஏப்ரல்-அக்டோபர் மாதங்களில் மட்டும் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 90% சதவிகித மின்னணு ஏற்றுமதியை தமிழ்நாடு செய்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இருந்து தமிழ்நாடு அதன் சாதனையை இந்த வருடம் முறியடிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு மீண்டும் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக மாற உள்ளது. கர்நாடகா ஏற்றுமதி மதிப்பை விட இரு மடங்கு ஏற்றுமதியை தமிழ்நாடு மேற்கொண்டு உள்ளது. தமிழ்நாடு மீண்டும் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக மாற உள்ளது. தொடர்ந்து 3வது வருடமாக இதில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஏற்றுமதி மதிப்பை விட இரு மடங்கு ஏற்றுமதியை தமிழ்நாடு மேற்கொண்டு உள்ளது. இதனால் உத்தர பிரதேசம் உட்பட எந்த மாநிலமும் எட்ட முடியாத உயரத்தில் தமிழ்நாடு உள்ளது.
அடித்து ஆடும் தமிழ்நாடு
குஜராத், கர்நாடகா, மஹாராஷ்டிரா போல அல்லாமல் தமிழ்நாடு இந்த துறையில் அடித்து ஆட தொடங்கி உள்ளது. ஏற்கனவே பல ஆப்பிள் சுற்றுச்சூழல் உதிரி பாகங்கள் சப்ளையர்களைக் கொண்டுள்ள தமிழ்நாடு, மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தியை மேலும் அதிகரிக்கும் நோக்கில், தமிழ்நாடு மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டத்தை ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், ரூ.30,000 கோடி முதலீடுகளை ஈர்த்து, சுமார் 60,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல நிறுவனங்களை ஈர்க்கும் வகையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளுக்கு இணையான மாநில அளவிலான சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. இதன் மூலம், மாநிலத்தில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு தரமான ஆதரவு உறுதி செய்யப்படுகிறது என்று தமிழக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
-
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications