வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் வாக்குச்சாவடி ரீதியாக பதிவான வாக்குகளை கட்சிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறதாம். வாக்குப்பதிவு அடிப்படையில் எந்த கட்சிக்கு சாதகமாக முடிவுகள் இருக்கும் என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே கடந்த வெள்ளிக்கிழமை 2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடந்தது.

மொத்தமுள்ள 534 லோக்சபா தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடந்தது.
வாக்குப்பதிவு: மாநிலத்தில் 69.71% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாகத் தர்மபுரியில் 81.48% வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது வாக்கு சதவிகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. குறிப்பாகத் தூத்துக்குடி, தேனி, சிவகங்கை உள்ளிட்ட நட்சத்திர தொகுதிகளில் வாக்குப்பதிவு அதிகம் குறைந்துள்ளது.
தமிழகத்தில் பதிவான மொத்த வாக்கு சதவீதம் முதலில் 72.09 சதவீதம், 2வது 69.46 சதவீதம் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 69.71 சதவீதம் என 3வது முறையாக மாற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொகுதி வாரியாக பார்த்தால் அதிகபட்சமாக தர்மபுரியில் 81.20 சதவீத ஓட்டு பதிவாகி உள்ளது. குறைந்தபட்சம் என்றால் மத்திய சென்னையில் 53.96 சதவீத ஓட்டு பதிவாகி உள்ளது. மேலும் திருவள்ளூர் தொகுதியில் 68.59 சதவீதம், வடசென்னையில் 60.11 சதவீதம், தென்சென்னையில் 54.17 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 60.25 சதவீதம், காஞ்சிபுரத்தில் 71.68 சதவீதம், அரக்கோணத்தில் 74.19 சதவீதம், வேலூரில் 73.53 சதவீதம், கிருஷ்ணகிரியில் 71.50 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது.
சர்வே; லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் வாக்குச்சாவடி ரீதியாக வாரியாக பதிவான வாக்குகளை கட்சிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறதாம். வாக்குப்பதிவு அடிப்படையில் எந்த கட்சிக்கு சாதகமாக முடிவுகள் இருக்கும் என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம்.
அதாவது தேர்தலுக்கு பின்பான சர்வேயை கட்சிகள் எடுக்க தொடங்கி உள்ளன. 40 நாடாளுமன்ற தொகுதிகளில் இருக்கும் பல்வேறு சட்டசபை தொகுதி வாரியாக இந்த ஆய்வுகளை கட்சிகள் செய்து வருகிறதாம். 15 சட்டசபை தொகுதிகளில் வாக்கு பதிவு 80 சதவிகிதத்திற்கும் மேல் உள்ளது.
கட்சிகள் மேற்கொள்ளும் ஆய்வுகள்: 48 சட்டசபை தொகுதிகளில், 75 முதல் 80 சதவீதம் பதிவாகி உள்ளது. இப்படி பதிவான வாக்கு சதவிகிதம் அடிப்படையில்தான் கட்சிகள் ஆய்வு செய்து வருகின்றன. அதன்படி எந்தெந்த வாக்குசாவடிகளில் எவ்வளவு வாக்குகள் பதிவாகி உள்ளன என்று கட்சிகள் சர்வே எடுக்க தொடங்கி உள்ளதாம்.
வாக்குப்பதிவு அடிப்படையில் எந்த கட்சிக்கு சாதகமாக முடிவுகள் இருக்கும் என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம்.
திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என்று நிர்வாகிகள் உள்ளூர் அளவில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்களாம். முக்கியமாக எம்எல்ஏக்கள் உள்ள லோக்சபா தொகுதிகளில் அந்த பகுதி எம்எல்ஏக்கள் தங்கள் கட்சிகளுக்கு இது தொடர்பாக ரிப்போர்ட்களை அனுப்பி இருக்கிறார்களாம். எங்கள் தொகுதியில் இவ்வளவு வாக்குகள் பதிவாகி உள்ளன.
இதனால் நமக்குத்தான் சாதகம், இந்த வாக்குச்சாவடியில் வாக்குகள் குறைவாக பதிவாகி உள்ளன, அதனால் நமக்கு நிலைமை சாதகம் இல்லை என்று கட்சி தலைமைகளுக்கு ஏற்கனவே வாக்குப்பதிவு தொடர்பாக ரிப்போர்ட் செல்ல தொடங்கி உள்ளதாம்.












Click it and Unblock the Notifications