Plus 2 Result: நாளை காலை வெளியாகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு ரிசல்ட்! எப்படி பார்ப்பது?
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்புக்கு முடிவு கட்டும் வகையில், தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியாக உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல் வெளியான நிலையில், நாளை காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
2025-2026 கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் மார்ச் 2ஆம் தேதி தொடங்கி நடத்தப்பட்டன. பொதுத்தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். பள்ளி மாணவர்களுடன் தனித் தேர்வர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.

தேர்வுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மாணவர்களின் விடைத்தாள்கள் ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை திருத்தப்பட்டன. மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இந்த மதிப்பீட்டு பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால் தமிழகத்தில் அரசியல் சூழல் பரபரப்பாக இருந்ததாலும், புதிய அரசு அமைந்த பிறகே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்ற தகவலும் பரவியது. இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் குழப்பத்திலும் பதற்றத்திலும் இருந்தனர். இந்த நிலையில் அனைத்து சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நாளை காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள நிலையில்," மார்ச் 2026-ல் நடைபெற்ற 2025- 2026 கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொது தேர்வு முடிவுகள் 08.05.2026 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் இணையதளம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் https://results.digilocker.gov.in/ மற்றும் tnresults.nic.in இணையதளங்களில் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும் பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணிற்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்" எனக் கூறப்பட்டுள்ளது.
-
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்












Click it and Unblock the Notifications