ஒடிசா ரயில் விபத்து..உடனே தயாரான உயர்அதிகாரிகள் குழு... டிஜிபி சைலேந்திரபாபு முக்கியமான உத்தரவு
சென்னை : ஒடிசா ரயில் விபத்து குறித்து பேசிய தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ய காவல்துறை சார்பில் தற்போது உயர்அதிகாரிகள் குழு ஒன்றை அமைத்துள்ளோம். விபத்து தொடர்பாக தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறோம். தகவல்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார்.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே சென்னை கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் 350க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். விபத்தில் சிக்கியோரை மீட்கும் பணியில் 800 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஒடிசா அரசு தகவல் தெரிவித்துள்ளது.இந்த கோரவிபத்து காரணமாக கிழக்கு கடற்கரை ரயில்வே வழித்தடத்தில் வரும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது

விபத்தில் உயிரிழந்தோருக்கு ₹10 லட்சம், பலத்த காயம் அடைந்தோருக்கு ₹2 லட்சம், லேசான காயம் அடைந்தோருக்கு ₹50,000 நிவாரணத்தை ரயில்வே அறிவித்துள்ளது
ரயில் விபத்து நடந்த இடத்திற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விரைந்துள்ளார்; விமானப்படையும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தோருக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து பேசிய தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ய காவல்துறை சார்பில் தற்போது உயர்அதிகாரிகள் குழு ஒன்றை அமைத்துள்ளோம். விபத்து தொடர்பாக தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறோம். தகவல்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம். இதற்காக ஒடிசா மாநில ரயில்வே படையுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அங்குள்ள ரயில்வே காவலர்கள் மூலம் விபத்தில் சிக்கியவர்களை பற்றி குடும்பத்தினர் தொடர்பு கொள்ளவும், அவர்களுக்கு வேண்டிய எல்லா உதவிகளை செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications