மருத்துவ விடுப்பில் சென்ற.. பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன்! புதிய பொறுப்பு டிஜிபி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு காவல்துறையின் பொறுப்பு டிஜிபியாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வெங்கட்ராமன் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அவர் 15 நாட்கள் மருத்துவ விடுப்பில் சென்றிருப்பதால், தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் இயக்குநர் அபய்குமார் சிங் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

பொறுப்பு டிஜிபி எனும் நடைமுறை எங்குமே கிடையாது, தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படி பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டிருக்கிறார் என, சீனியாரிட்டி அடிப்படையில் டிஜிபி நியமிக்கப்படாதது குறித்து பாஜக, அதிமுக என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. ஆனால், பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் தற்போது வரை பொறுப்பு டிஜிபிதான் பதவியில் இருக்கிறார் என திமுக இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தது.

Tamil Nadu DGP police

இப்படி பொறுப்பு டிஜிபி குறித்து விவாதங்கள் எழுந்து வந்த நிலையில், நேற்றிரவு பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனுக்கு தீடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் 15 மருத்துவ விடுப்பு எடுத்திருக்கிறார்.

இந்நிலையில், அவருக்கு பதில் தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் இயக்குநர் அபய்குமார் சிங் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+