தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்புக்கு புதிய திட்டம் அறிமுகம்
சென்னை : பெண்கள் பாதுகாப்பு புதிய திட்டம் என்ற பெயரில் தமிழ்நாடு காவல்துறை புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி 1091, 112 ஆகிய எண்களுக்கு அழைத்தால் ரோந்து வாகனம், பெண்களை இருக்கும் இடத்திற்கே வந்து அழைத்து செல்லும்
இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என காவல்துறை அறிவித்துள்ளது.
தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெண்கள் பாதுகாப்புக்கென புதிய திட்டம் ஒன்றை தமிழ்நாடு காவல்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என நினைக்கும் பெண்கள், காவல்துறையின் உதவி எண்கள் 1091, 112, 044 -23452365 மற்றும் 044-28447701 ஆகியவற்றுக்கு அழைக்கலாம்.

காவல் ரோந்து வாகனம் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து உங்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும். அனைத்து நாட்களிலும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சேவை இலவசமாகும்" இவ்வாறு தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுஒருபுறம் எனில் ஏற்கனவே தமிழக காவல்துறை 'காவலன் SOS' என்ற ஆப்பை பெண்களின் பாதுகாப்பிற்காக அறிமுகம் செய்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பதற்காக, அவசர நேரங்களில் பெண்கள் மற்றும் முதியவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உதவியாகத் தமிழகக் காவல்துறை காவலன் SOS' என்ற ஆப்பை கடந்த 2019ம் ஆண்டு அறிமுகம் செய்தது.
இந்த ஆப்பை டவுன்லோடு செய்தால், ஆபத்திலிருக்கும் நேரத்தில், அடுத்த சில நிமிடங்களிலேயே சம்பந்தப்பட்டவர்களுக்குக் காவல்துறையின் பாதுகாப்பு கிடைத்துவிடும் என்றும் தனியாகப் பயணிக்கும் அனைத்துப் பெண்களுமே இந்த ஆப்பை டவுன்லோடு செய்து வைத்துக்கொள்வது நல்லது என்றும் தமிழக காவல்துறை அறிவுறுத்தி இருந்தது. இந்த ஆப் குறித்தும் நாம் தற்போது பார்ப்போம்.
கூகுள் ப்ளே ஸ்டோரில் காவலன் SOS' என்று நீங்கள் தேடினால், தமிழகக் காவல்துறையின் முத்திரையுடன் இருக்கும் காவலன் ஆப்பை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். இந்த ஆப்பிற்கு ஆடியோ ரெக்கார்டிங், வீடியோ ரெக்கார்டிங் அவசியம் என்பதால் அதற்கு அனுமதி கொடுக்க வேண்டும். இதில் தமிழ்/ஆங்கிலம் என இரண்டு மொழிகள் கொடுக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு எந்த மொழி பயன்படுத்த வசதியாக இருக்குமோ அந்த மொழியைத் தேர்வு செய்யுங்கள்.
அதன்பின் தமிழக போலீஸ் முத்திரையுடன் கூடிய பதிவுப் பக்கம் காட்சியளிக்கும். அதில் உங்களின் மொபைல் எண், பெயர், மாற்று எண் போன்றவற்றைப் பதிவிடுங்கள். பிறகு அதில் உள்ள Next' என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
அதன்பின்னர் பிறந்த தேதி, பாலினம், நீங்கள் வசிக்கும் இடம், நீங்கள் வேலை செய்யும் இடத்தின் முகவரி, மெயில் ஐடி போன்ற தகவல்களை காவலன் எஸ்ஓஎஸ் ஆப்பில் அப்டேட் செய்ய வேண்டும் இந்த அடிப்படைத் தகவல்களைக் கொடுத்த பின் உங்கள் மொபைலுக்கு OTP (One Time Password) எண் வரும். அதைக் கொடுத்து பதிவு செய்தால் காவலன் SOS' ஆப்பில் உங்கள் கணக்கு தயாராகி விடும்.
இந்த ஆப்பில் என்ன விஷேசம் என்றால், நீங்கள் ஆபத்தில் இருக்கும்போது உங்களைப்பற்றிய தகவல்களைத் தெரிவிக்க வேண்டிய மூன்று நபர்களின் மொபைல் எண்களைப் பதிவிட்டு வைத்துக் கொள்ளலாம். அதனால் ஆபத்துக் காலத்தில் உங்களைப்பற்றிய தகவல் யாருக்குக் கிடைத்தால், அவர்கள் உங்களுக்கு உதவுவார்களோ அவர்களின் எண்ணை அதில் கொடுங்கள். அதாவது அப்பா, அம்மா மற்றும் நண்பர்கள் என உங்களுக்கு யார் உடனே ஓடி வந்து உதவுவார்களோ அவர்களின் எண்ணை பதிவிடுங்கள். இதன்பின் நீங்கள் எப்போது ஆபத்தில் இருப்பதாக உணர்கிறீர்களோ அந்த நேரத்தில் இந்த ஆப்பை ஓபன் செய்து நடுவில் சிவப்பு வண்ணத்தில் இருக்கும் SOS' என்ற ஆப்ஷனைத் தேர்வுசெய்தால் போதும் GPS இயங்க ஆரம்பித்துவிடும். மேலும், உங்கள் மொபைல் போனில் இருக்கும் கேமரா தானாகவே இயங்கி, வீடியோ எடுத்து, காவல்துறை கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு அனுப்பிவிடும்.
உங்கள் போனில் இணைய வசதி இல்லாத நேரத்திலும், நீங்கள் SOS' பட்டனை அழுத்துவதன் மூலம் உங்களைப் பற்றிய தகவல்கள் காவல் கட்டுப்பாட்டு மையத்திற்கு எஸ்எம்எஸ் போய்விடும். காவல் கட்டுப்பாட்டு மையத்திற்குத் தகவல் சென்ற சில நிமிடங்களில் நீங்கள் இருக்கும் பகுதிக்கு போலீசார் உடனே வந்து பாதுகாப்பார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications