தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும்.. தேர்தல் தேதிக்கும் இவ்வளவு கேப் ஏன்? கிளம்பும் சந்தேகம்!
சென்னை: தமிழகத்தில் ஏப்.23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பக்கத்தில் இருக்கும் புதுச்சேரிக்கு ஏப்.9ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும், தேர்தல் தேதிக்கும் இடையே 34 நாட்கள் வித்தியாசம் ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஒருபுறமும், மறுபுறம் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியும் தேர்தலை எதிர்கொள்கிறது. இது தவிர தமிழக வெற்றிக்கழகம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் தனியே களம் காண்கின்றன.

ரெடியான திமுக
திமுக கூட்டணியை பொறுத்தவரை, 26 கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இன்று வரை, காங்கிரஸ் 28+1, மதிமுக 4, ஐயுஎம்எல் 2, எம்என்கே 2, கொங்கு மக்கள் தேசிய கட்சி 2 ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உறுதியாகியிருக்கிறது. விசிக, இடதுசாரிகள், மநீம உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் இன்னும் ஒதுக்கப்படவில்லை. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இப்படி இருக்கையில், மறுபுறம் என்டிஏ கூட்டணி இன்னும் முழுமையடையவில்லை.
இழுபறியாகும் என்டிஏ கூட்டணி
குறிப்பாக விஜய்யை கூட்டணிக்குள் இழுக்க தொடர்ந்து முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், புதுச்சேரியில் கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிட்டது. எனவேதான் ஏப்.9 அன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் விஜய் இன்னும் கூட்டணிக்குள் வராததால், கூடுதல் காலம் தேவைப்படுவதாலும், ஏப்.23ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
பெரிய இடைவெளி
புதுச்சேரியில், தேர்தல் தேதி அறிவிப்புக்கும் தேர்தல் தேதிக்கும் இடையில் வெறும் 24 நாட்கள்தான் இருக்கின்றன. அதுவே, தமிழ்நாட்டில் 34 நாட்கள் இருக்கின்றன.
- தமிழகத்தில் வேட்புமனுத்தாக்கல் தேதி - மார்ச் 30
- வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் - ஏப்.6
- வேட்புமனு பரிசீலனை - ஏப்.7
- மனுத்தாக்கல் திரும்ப பெற கடைசி நாள் - ஏப்.9
- வாக்குப்பதிவு நாள் - ஏப்.23
- வாக்கு எண்ணிக்கை நாள் - மே.4
சந்தேகம் கிளப்பிய ஜோதிமணி எம்பி
தேர்தல் தேதி இடைவெளி குறித்தும், பொதுவாக புதுச்சேரிக்கும், தமிழ்நாட்டுக்கும் இந்த முறை ஒரே நாளில் தேர்தல் தேதி அறிவிக்காதது குறித்தும், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சந்தேகம் கிளப்பியிருக்கிறார். இது குறித்து தனது x பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,
"பொதுவாக தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியில் ஒரே நாளில் தான் தேர்தல் நடப்பது வழக்கம். இந்தமுறை தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இரண்டு வாரங்களுக்குப் பிறகு நடக்கிறது. இதற்கான காரணத்தை அறிந்துகொள்வது ஒன்றும் கஷ்டமில்லை. பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்பது தேர்தல் தேதியிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது. எல்லாவற்றையும் எதிர்கொள்கிற அறிவும், அரசியல் புரிதலும் தமிழ்நாட்டு மக்களுக்கு உண்டு. இந்தியா கூட்டணிக்கும் உண்டு" என்று தெரிவித்திருக்கிறார்.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications