Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

”2 மணி நேரம் மட்டுமே” எந்தெந்த நேரங்களில் பட்டாசு வெடிக்கலாம்? தமிழகத்தில் கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாட்டை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

வரும் அக்.24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக இப்போது இருந்த பொதுமக்கள் கடைவீதிகளில் துணிகள் வாங்குவது, பலகாரங்களுக்கான பொருட்கள் வாங்குவது என்று குவிந்து வருகின்றனர்.

அதேபோல் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிப்பதிலும் பொதுமக்கள் ஆர்வமாக இருப்பர். இதற்காக பல்வேறு மாவட்டங்களிலும் கட்டுப்பாடுகளுடன் பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள்

பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள்

சென்னை தீவுத்திடலில் 40 பட்டாசு கடைகள் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. வரையறுத்த விதிமுறைகளின்படி 10 அடி இடைவெளியில் ஒவ்வொரு கடையும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பட்டாசு வெடிப்பதற்கு நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி நேர கட்டுப்பாட்டை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

மாசற்ற தீபாவளி

மாசற்ற தீபாவளி

அதேபோல் தீபாவளி பண்டிகையை விபத்து, ஒலி மற்று மாசு இல்லாமல் கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பட்டாசு வெடிப்பதால், சுற்றி இருக்கக் கூடிய நிலம், நீர், காற்று ஆகியவை மாசுபடாத வகையிலும், ஒலி மற்றும் காற்று மாசால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாசு கட்டுப்பாட்டு வாரியம்

மாசு கட்டுப்பாட்டு வாரியம்

கடந்த ஆண்டு ஒலி எழுப்பக் கூடிய பட்டாசுகளை வெடிக்க காலை 6 முதல் 7 மணி வரையிலும், மாலை 7 முதல் 8 மணி வரையிலும் மட்டுமே நீதிமன்றம் அனுமதியளித்தது. அதேபோல் இந்த ஆண்டும் நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு, உடல்நலப் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

பசுமை பட்டாசுகள்

பசுமை பட்டாசுகள்

பொதுமக்களை பொறுத்தவரை தீபாவளியன்று குறைந்த ஒலியுடன் குறைந்த காற்றுமாசு ஏற்படுத்தக் கூடிய பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும், மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் திறந்த வெளியில் பொதுமக்கள் ஒன்றுகூடி பட்டாசுகளை வெடிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரவெடியை தவிர்க்கவும்

சரவெடியை தவிர்க்கவும்

அதேபோல் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய அதிக ஒலி எழுப்பும் சரவடிகளை தவிர்க்கவும், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு, குடிசைப் பகுதிகள், எளிதில் தீப்பற்ற கூடிய இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+