தமிழகத்தில் 84.52% வாக்குப்பதிவு.. 11 மணி நேரத்தில் 4.84 கோடி பேர் ஓட்டு! கரூர் தான் டாப்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மொத்தமாக 11 மணி நேரம் வாக்குப் பதிவு நடந்த நிலையில், தமிழகத்தில் 84.45% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளார். குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 75.35% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், அதிகபட்சமாக கரூரில் 91.86% வாக்குகள் பதிவாகியுள்ளன.

பல மாவட்டங்களில் காலை முதலே வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். குறிப்பாக பெண்கள் மற்றும் முதியோர் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வந்தது கவனிக்கத்தக்கதாக உள்ளது.

Tamil Nadu Assembly Election 2026 TN Polls Tender Vote

இந்த தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகளை மேற்கொண்டது. இந்த தேர்தலில் மொத்தமாக 5,67,07,380 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இதில் 2,89,60,838 பெண்கள் மற்றும் 2,77,38,925 ஆண்கள் உள்ளனர். மொத்த வாக்காளர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சுமார் 14.5 லட்சம் இளைஞர்கள் இந்த முறை முதல்முறையாக வாக்களித்தனர்.

மாநிலம் முழுவதும் 33,133 மையங்களில் அமைக்கப்பட்ட 75,064 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த பணிக்காக 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்தல் பணியாளர்கள் மற்றும் 83,000-க்கும் அதிகமான காவல்துறை பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பதற்றமான பகுதிகளில் கூடுதல் போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினரும் நிறுத்தப்பட்டர்.

தொழில்நுட்ப வசதிகளிலும் இந்த முறை அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 1.06 லட்சத்திற்கும் அதிகமான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM), கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் VVPAT இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. ஏதேனும் இயந்திரக் கோளாறுகள் ஏற்பட்டால் உடனடியாக மாற்றுவதற்காக கூடுதலாக 20 முதல் 30 சதவீதம் வரை இயந்திரங்கள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், தபால் வாக்குப்பதிவும் ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதுவரை 4,18,541 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், மாலை 6 மணி நிலவரப்படி மாநிலம் முழுவதும் 84.45% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் 11 மணி நேரத்தில் சுமார் 4.84 கோடி வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகபட்சமாக குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 75.35% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், அதிகபட்சமாக கரூரில் 91.86% வாக்குகள் பதிவாகியுள்ளன. நாமக்கல்லில் 89.43%, சேலத்தில் 90.13%, தர்மபுரியில் 89.78% வாக்குகள், திண்டுக்கல்லில் 88.25 %, ராணிப்பேட்டையில் 88.53% வாக்குகள் பதிவாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+