பத்திரப்பதிவில் அதிரடி.. எகிறி அடித்த பதிவுத்துறை! 33 மடங்கு உயர்வா? ஓடோடி வந்த எடப்பாடி பழனிசாமி
சென்னை: முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு பலமடங்கு உயர்ந்துள்ள நிலையில், தமிழக அரசுக்கு, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை நிலம், வீடு விற்பனை தவிர பல்வேறு இனங்களுக்கான ஆவணங்களையும் பதிவு செய்ய முத்திரைத்தாள் கட்டணங்களும், பதிவு கட்டணங்களும், மக்களிடமிருந்தே வசூலிக்கப்படுகிறது.

கடந்த வருடம் பத்திரப்பதிவு துறையில் பெரிய அளவிலான ஒப்பந்தங்கள், பத்திரப்பதிவு தொடர்பான விஷயங்களுக்கு முத்திரைத்தாள் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், கடந்த வாரம் முதல் லீஸ், ரத்து ஆவணம், பவர் பத்திரம் போன்ற சிறிய அளவிலான பண மதிப்புடைய முத்திரைத்தாள் ஆவணங்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது.
ஆவணங்கள்: அந்தவகையில், தமிழகத்தில் தத்து ஆவணங்களுக்கு ரூ.100 கட்டணம் ரூ.1000 ஆகவும், ஒப்பந்த ஆவணங்களுக்கு ரூ.20 கட்டணம் ரூ.200 ஆகவும், ரத்து பத்திரங்களுக்கு ரூ. 50 கட்டணம் ரூ.1000 ஆகவும் அதிகரித்துள்ளது. டூப்ளிகேட் பிரதிகளுக்கு ரூ.20 கட்டணம் ரூ.100 ஆகவும், குடும்ப உறுப்பினர் பவர் பத்திரம் போடுவதற்கு ரூ.100 கட்டணம் ரூ.1000 ஆகவும் உயர்ந்துள்ளது.
குடும்ப உறுப்பினர்கள் அல்லாத சொத்து பிரிவினை மார்க்கெட் மதிப்பில் அந்த பங்கிற்கான 4 சதவீதம் (பங்கிற்கான 4 சதவீத மதிப்பு) உயர்த்தப்பட்டுள்ளது. அடமான மறுபரிமாற்றம் - 1,000 (80), பாதுகாப்பு பத்திரங்கள் - 1,000 (80), ஒப்பந்ததை ரத்து செய்தல் - 1,000 (80), குத்தகையை விடுவித்தல் - 1,000 (40), டிரஸ்டிற்குள் பரிமாற்றம் - 1,000 (30), டிரஸ்ட் அறிவித்தல் - 1,000 (180), டிரஸ்ட் உரிமையை மீட்டெடுத்தல் -1,000 (120) என்று, இந்த கட்டண உயர்வு அமலாகியிருக்கிறது.
முத்திரைத்தாள்: இப்படி பல பத்திரங்களின் முத்திரைத்தாள் கட்டணங்கள் ஒரேடியாக உயர்ந்துள்ள நிலையில், இந்த கட்டண உயர்வை கேட்டு பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.. வீடு, நிலம் வாங்குவோரும் கவலை அடைந்துள்ளனர். இப்படிப்பட்ட சூழலில், இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்த துவங்கியிருக்கின்றன.
அந்தவகையில், முத்திரைத்தாள் கட்டணங்களை உயர்த்தி வெளியிட்டுள்ள அரசாணையை உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி: இது தொடர்பாக எக்ஸ் சமூகவலைதளத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "26 சேவைக்கான முத்திரைத்தாள் கட்டணங்களை 10 மடங்கு முதல் 33 மடங்கு வரை உயர்த்தி இருப்பது கண்டிக்கத்தக்கது. கட்டணங்களை உயர்த்தி வெளியிட்டுள்ள அரசாணையை உடனடியாகத் திரும்ப பெற வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி, வழிகாட்டு மதிப்பையும் முன்பிருந்த நிலைக்குத் தொடர வேண்டும். மின் கட்டணம், பால் உள்ளிட்ட விலை உயர்வு மூலம் மக்கள் தலையில் தமிழக அரசு சுமையை ஏற்றுகிறது" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
4 நாட்களுக்கு முன்பு, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வெளியிட்டிருந்த அறிக்கையில், "வீட்டை வாங்குவது என்பது மிகவும் கடினமான ஒன்று. வங்கி, வங்கியாக அலைந்து திரிந்து, கடன் பெற்று, வீட்டை வாங்கி, அதற்கான உள் வேலைகளை செய்து, கடனுக்கு மாதாந்திர தவணை கட்டி மக்கள் அல்லலுற்று இருக்கின்ற நிலையில், முத்திரைக்கட்டணத்தை அநியாயமாக, ஒரே ஆண்டில் இரண்டு மடங்கு உயர்த்தி இருப்பது என்பது என்பது கொடுமையிலும் கொடுமை.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோது என்ன வழிகாட்டி மதிப்பு இருந்ததோ அதே மதிப்பினை தொடர்ந்து கடைபிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஓபிஎஸ் கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications