தமிழக வனத்துறையால் வெளிச்சத்திற்கு வந்த.. கடல் அதிசயம்! உலகமே வியந்து பார்க்குது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகக் கடற்கரையிலிருந்து ஆமைகளுக்குச் செயற்கைக்கோள் கருவிகளைப் பொருத்தித் தொடர்ந்து கண்காணிக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டத்தை தமிழக வனத்துறை தொடர்ந்து செய்து வருகிறது. இந்நிலையில், செயற்கைக்கோள் தகவல்களை ஆய்வு செய்தபோது, இலங்கைக்கு அருகே கடல் சொர்க்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது உலக அளவில் விஞ்ஞானிகளை ஆச்சரியமடைய வைத்திருக்கிறது.

தமிழகத்தின் சென்னை மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் முட்டையிட வரும் ஆலிவ் ரிட்லி ஆமைகளுக்குச் செயற்கைக்கோள் கருவிகள் பொருத்தி தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை முன்னின்று நடத்திய தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு, ஆமைகளின் இந்த நெடிய பயணம் குறித்த தரவுகளைச் சமூக வலைதளங்களில் தற்போது பகிர்ந்திருக்கிறார்.

Tamil Nadu

செயற்கைக்கோள் கருவி

அதாவது, தமிழகக் கடற்கரையிலிருந்து செயற்கைக்கோள் கருவி பொருத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட ஆமைகள் இலங்கைக்குக் கிழக்கே கடலின் நடுவே அமைந்துள்ள பகுதியில் குவிகின்றன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், தமிழகத்தின் கடற்கரையில் குறிப்பாகத் தனுஷ்கோடி, சென்னை போன்ற பகுதிகளிலிருந்து விடப்பட்ட ஆமைகளும், ஒடிசாவின் ரிஷிகுல்யா கடற்கரையிலிருந்து வரும் புகழ்பெற்ற 'ஆலிவ் ரிட்லி' ஆமைகளும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணித்து இந்த ஒரே புள்ளியில் சந்திக்கின்றன என்பதுதான்.

இது வெறும் தற்செயல் நிகழ்வல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆமைகளின் மரபணுவில் பதிக்கப்பட்ட ஒரு கடல் வரைபடம் இது. புவி காந்தப்புலத்தை வைத்து அவை இந்த இடத்தைத் துல்லியமாகக் கண்டறிகின்றன.

ஸ்ரீலங்கா டோம்

இந்த பகுதி ஸ்ரீலங்கா டோம் என்று அழைக்கப்படுகிறது. இது கடலின் மர்மமான இதயமாக இருக்கிறது. கடலின் ஆழமான பகுதியில் இருக்கும் குளிர்ந்த, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நீர் மேல்பகுதியை நோக்கித் தள்ளப்படும் 'அப்வெல்லிங்' என்ற நிகழ்வு இங்கு நடக்கிறது.

இது இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த 'பிளாங்க்டன்' எனப்படும் நுண் உயிரினங்களின் பெருக்கத்திற்கு உதவுகின்றன. இதை உண்ண சிறிய மீன்கள் வருகின்றன, அவற்றை உண்ண ஆமைகள், திமிங்கலங்கள், கடல் பறவைகள் எனப் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் ஓரிடத்தில் குவிகின்றன.

ஆமைகளை பாதுகாத்தல்

செப்டம்பர் மாதம் அந்த உணவு மண்டலம் குறையத் தொடங்கும்போது, ஆமைகள் மீண்டும் தங்கள் தாயகக் கடற்கரைகளை நோக்கிப் பயணிக்கின்றன.

தற்போது வெளியாகியுள்ள செயற்கைக்கோள் கருவிகளின் டேட்டா, முக்கியமான விஷயத்தை சொல்லியிருக்கிறது. அதாவது, நாம் ஒரு கடற்கரையை மட்டும் பாதுகாப்பதன் மூலம் ஆமைகளைக் காப்பாற்றிவிட முடியாது. அவை பயணிக்கும் பாதைகள் மற்றும் அவை உணவு உண்ணும் இடங்கள் என அனைத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் அது.

இலங்கையும் இணைய வேண்டும்

தமிழகக் கடற்கரையில் நாம் செய்யும் பாதுகாப்பு, இலங்கைக் கடலில் உள்ள பாதுகாப்போடு இணைந்தால்தான் இந்தச் சங்கிலி முழுமையடையும். ஸ்ரீலங்கா டோம் போன்ற பகுதிகள் கடலில் மறைந்திருக்கும் எஞ்சின்கள் போன்றவை. இவை இந்தியப் பெருங்கடலின் ஒட்டுமொத்தப் பல்லுயிர் பெருக்கத்தைத் தாங்கிப் பிடிக்கின்றன.

இந்தத் தரவுகள் மூலம், சர்வதேசக் கடல் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், ஆமைகளுக்குப் பாதுகாப்பான பாதைகளை உருவாக்கவும் அரசுகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும். இந்த தகவலை தற்போது சுப்ரியா சாஹு, தனது x பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+