10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் அல்ல..பொய்யான தகவல்..பள்ளி கல்வித்துறை இயக்குனர் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் உண்மை இல்லை என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்

கோடை விடுமுறைக்கு பின்னர் ல் 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் கடந்த ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மழலையர் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு கடந்த ஜூன் 14-ந் தேதி முதல் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் 10, 11, 12 வகுப்புகள் படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வினை எதிர்கொள்ள போகிறார்கள். அவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது பள்ளி கல்வித்துறை.

Tamil Nadu School Education Department has issued an important order to the students of class 10, 11 and 12

இந்த நிலையில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்றும் அனைத்து உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகளிலும் மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியதாக பரவிய தகவல் உண்மை இல்லையாம். சிறப்பு வகுப்புகள் பள்ளி முடிந்ததும், மாலை 5 வரையோ, அல்லது மாலை 5.30 மணி வரையோ நடைபெற வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியதாக வெளியான தகவல்களும் உண்மையில்லை என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அரசுப் பள்ளிகளுக்கான காலை உணவுத் திட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட உணவுப் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டது. தமிழக அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்ட உணவுப் பட்டியலின்படி, திங்கட்கிழமை காய்கறி சாம்பாருடன் உப்புமா வகைகள் வழங்கப்படும் என்றும், செவ்வாய்க்கிழமை கிச்சடி வகைகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை காய்கறி சாம்பாருடன் ரவா பொங்கல் அல்லது வெண் பொங்கல் வழங்க வேண்டும் என்றும், வியாழக்கிழமை காய்கறி சாம்பாருடன் கூடிய உப்புமாவும், வெள்ளிக்கிழமை கிச்சடி வகைகளையும் வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலை உணவு திட்டத்தில் உள்ளூரில் விளையும் காய்கறிகளையும், சிறு தானியங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+