தமிழ்நாட்டில் 1-9 வகுப்பு மாணவர்களுக்கான கோடை விடுமுறை அறிவிப்பு! பள்ளிகள் எப்போது தொடக்கம்? விவரம்
சென்னை: தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கியிருக்கிறது. பல இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மறுபுறம் தேர்தல் களமும் சூடுபிடித்திருக்கின்றன. இந்நிலையில், 1-9ம் வகுப்பு மாணவர்களுக்கான கோடை விடுமுறை தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே தமிழ்நாட்டில், 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவடைந்திருக்கின்றன. இந்நிலையில், தேர்தலுக்கு முன்னதாக மற்ற வகுப்புகளுக்கும் தேர்வுகளை முடிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது 1-9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக 1-9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வுகள் ஏப்.10 தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் ஏப்.23ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால், தேர்தலுக்கு முன்னரே தேர்வுகளை முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து தேர்வு தேதிகள் மாற்றப்பட்டன. அதன்படி 1-9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப்.17ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. 2026-2027 கல்வி ஆண்டுக்கான பள்ளி வகுப்புகள் ஜூன் 1ம் தேதி முதல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில், "அரசு /அரசு உதவி பெறும் / தனியார் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கான பள்ளி இறுதித் தேர்வுகள் ஏப். 16 ஆம் தேதி நிறைவடைகின்றன. ஏப். 17 ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் கோடை விடுமுறை என அறிவிக்கப்படுகிறது.
ஏப். 25ஆம் தேதிவரை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க/நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் எல்.கே.ஜி / யூ.கே.ஜி வகுப்புகளை கையாளும் ஆசிரியர்கள் உள்பட அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை புரிந்து விடைத்தாள் மதிப்பீட்டு பணி வரும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பணி சார்ந்த நிர்வாகப் பணிகள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரால் வழங்கப்பட்ட தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (இடைநிலைக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறது.
2026-27ஆம் ஆண்டிற்கான புதிய கல்வியாண்டில் ஜூன் 1 ஆம் தேதியான திங்கட்கிழமை முதல் அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / தனியார் தொடக்க / நடுநிலை /உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.
வரும் கல்வியாண்டு முதல் 1-3 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பாட நூல்கள் அறிமுகப்படுத்தப்படுவதால் இந்த வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு ஜூன் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை மாவட்ட அளவில் பணியிடைப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications