Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

School holiday: போட்றா வெடியா.. நீட்டிக்கப்பட்ட அரையாண்டு தேர்வு விடுமுறை! பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில நாட்களாகவே அரையாண்டு விடுமுறை தொடர்பாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவி வந்தது. அதாவது கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் அதனை ஈடு செய்யும் வகையில் அரையாண்டு தேர்வு குறைக்கப்படலாம் எனவும், இந்த ஆண்டு 9 நாட்கள் மட்டுமே விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு அரையாண்டு விடுமுறை 12 நாட்கள் விடப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி மாணவர்களுக்காக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பு, மாணவர்களையும் ஆசிரியர்களையும் நிம்மதிப் பெருமூச்சு விட வைத்துள்ளது.
கடந்த சில நாட்களாக அரையாண்டு தேர்வு முடிந்த பிறகு விடுமுறை குறைக்கப்படும் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது.

கனமழை உள்ளிட்ட அவரின் காரணமாக கடந்த காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் அதனை ஈடு செய்யும் வகையில் அரையாண்டு தேர்வு விடுமுறை குறைக்கப்படலாம் என சொல்லப்பட்டது. இந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Tamil Nadu School HalfYearly Holiday

தமிழக பள்ளிக்கல்வித்துறை

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த தேர்வுகள் அனைத்தும் டிசம்பர் 23ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளன. பொதுவாக தேர்வுகள் முடிந்த உடனே அரையாண்டு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த கல்வியாண்டில், பருவமழை மற்றும் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டது.

அரையாண்டு தேர்வு விடுமுறை

இதனால் பாடத்திட்டம் மற்றும் வகுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால், அரையாண்டு விடுமுறையை குறைத்து, பள்ளிகளை விரைவாகத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியானது. குறிப்பாக, ஜனவரி 2ஆம் தேதியே பள்ளிகள் திறக்கப்படும் என்ற செய்தி மாணவர்களிடையே ஏமாற்றத்தையும் பெற்றோர்களிடையே கவலையையும் ஏற்படுத்தியது. இந்த சூழலில்தான் பள்ளிக்கல்வித்துறை தெளிவான விளக்கத்துடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அரையாண்டு விடுமுறை நீட்டிப்பு

அதில், மழைக்கால விடுமுறையை ஈடுசெய்யும் பெயரில் அரையாண்டு விடுமுறையை குறைக்க எந்தத் திட்டமும் இல்லை என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளி நாட்காட்டியில் நிர்ணயிக்கப்பட்டிருந்த விடுமுறை அட்டவணைப்படியே விடுமுறை தொடரும் என பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்துள்ளது. அதன்படி, டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 4ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த விடுமுறை முடிந்த பிறகு, ஜனவரி 5ஆம் தேதி வழக்கம்போல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.

தமிழக பள்ளி நாட்காட்டி

வழக்கமாக அரையாண்டு விடுமுறை 9 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த ஆண்டு மாணவர்களுக்கு 12 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. அதாவது, மூன்று நாட்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நீண்ட விடுமுறை, மாணவர்களுக்கு மன அழுத்தத்திலிருந்து விடுபட ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு ஆகியவை இந்த விடுமுறை காலத்திலேயே வருவதால், குடும்பத்தினருடன் நேரம் செலவிடவும், உறவினர்கள், நண்பர்களுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடவும் இது உதவியாக இருக்கும்.

மாணவர்களுக்கு குட் நியூஸ்

மேலும், வெளியூர் பயணம், ஓய்வு, பொழுதுபோக்கு ஆகியவற்றின் மூலம் மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் திரும்புவதற்கு இந்த விடுமுறை வழிவகுக்கும். இதனால், பள்ளிகள் மீண்டும் திறக்கும்போது, மாணவர்கள் அதிக ஆர்வத்துடனும் கவனத்துடனும் படிப்பில் ஈடுபட முடியும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+