சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாம்மா குட்டியம்மா.. அது உங்க ஸ்கூலம்மா.. ஆட்டோ ஏறியும் போலாம்.. பஸ்ஸில் ஏறியும் போலாம்.. போலாமா

Google Oneindia Tamil News

Recommended Video

    காலாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு | Tamilnadu Schools Reopen

    சென்னை: காலாண்டுத் தேர்வுக்கான விடுமுறை நேற்றுடன் முடிந்ததை அடுத்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. மாணவ மாணவிகள் காலையிலேயே பள்ளிக்கு ஆர்வமாய் புறப்பட்டு சென்றனர்.

    தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு பருவத் தேர்வுகளும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வுகளும் செப்டம்பர் 12ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை நடந்தது. இதையடுத்து செப்டம்பர் 24ம் தேதி தொடங்கி அக்டோபர் 2ம் தேதி வரை 9 நாட்கள் விடுமுறைக்குப் பின் பள்ளிகள் இன்று (அக்டோபர் 3ம் தேதி) திறக்கப்படுகிறது.

    tamil nadu schools reopen from today after quarterly exam leave

    முன்னதாக மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்துக்கான சுமார் 2 கோடி பாடபுத்தகங்கள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பும் பணி நடந்து முடிந்துள்ளது. இதனால் சீருடைகள், நோட்டுபுத்தகங்கள், உள்ளிட்ட இலவச பொருட்கள் பள்ளி திறக்கப்படும் இன்றே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏனெனில் பள்ளி திறக்கும் இன்று அனைத்து மாணவர்கள் கையிலும் பாடப்புத்தகம் இருக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதேபோல் பிளஸ் 2 வகுப்புக்குரிய பாடப்புத்தகங்கள் இரண்டு பாகங்களாக அச்சிடப்பட்டதால், இரண்டாம் பாகம் இன்று வினியோகப்படும் என கூறப்படுகிறது.

    English summary
    tamil nadu schools reopen from today after quarterly exam leave. students With interest in returning to school
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X