சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறப்பு... முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் அன்பில் மகேஷ்

ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் கோடை கால விடுமுறைக்கு பிறகு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாதம் 20 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

Recommended Video

    #BREAKING ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ்!

    தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கல்வி நிறுவனங்கள் செயல்படாமல் இருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டன. 1முதல் 9ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.

    இதையடுத்து இந்த ஆண்டு கட்டாயம் பொது தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்த நிலையில், 10 ,11 ,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
    பொதுத்தேர்வுகள் இம்மாதம் இறுதியில் நிறைவடைய உள்ளது.

    பள்ளிகள் திறப்பு எப்போது.. மாணவர்களுக்கு முக்கிய தகவல்.. தமிழக பள்ளி கல்வித்துறை அறிவிப்புபள்ளிகள் திறப்பு எப்போது.. மாணவர்களுக்கு முக்கிய தகவல்.. தமிழக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

    தேர்வு எழுதிய மாணவர்கள்

    தேர்வு எழுதிய மாணவர்கள்

    இதனிடையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கடந்த மே 13ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இவர்களுக்கு ஜூன் இரண்டாவது வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    பள்ளிகள் திறப்பது எப்போது

    பள்ளிகள் திறப்பது எப்போது

    இப்போது பள்ளிகள் திறக்கப்படும் நாள் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. 10, 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும்பணி , ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் ஆகியவை காரணமாக ஜூன் மாதம் இறுதியில் பள்ளிகள் திறப்பு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

     அன்பில் மகேஷ் அறிவிப்பு

    அன்பில் மகேஷ் அறிவிப்பு

    இந்நிலையில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். கோடை விடுமுறை முடிந்து ஜூன் 13 ஆம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தார்.

    ஜூன் இறுதியில் பள்ளிகள் திறப்பு

    ஜூன் இறுதியில் பள்ளிகள் திறப்பு

    12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாதம் 20 தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

    English summary
    School Education Minister Anbil Mahesh has announced that schools in Tamil Nadu will be reopened on June 13 for students in classes one to ten after the summer holidays.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X