சந்திராயன்களை தொடர்ந்து சூரியன் ஆய்வு ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர் தமிழக பெண் விஞ்ஞானி நிகர் சாஜி!
சென்னை: இந்திய விண்வெளி ஆய்வுத் துறையின் (இஸ்ரோ) புதிய சரித்திரமான ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர் தமிழ்நாட்டு பெண் விஞ்ஞானி நிகர் சாஜி என்பது பெருமிதத்திக்குரியது.
இஸ்ரோவின் சந்திரயான் விண்கலங்கள் மூன்றுக்கும் திட்ட இயக்குநர்களாக தமிழ்நாட்டு தமிழர்கள் தலைமை வகித்தனர். சந்திரயான் -1 க்கு விஞ்ஞானி மயில்சாமி அண்ணா துரை, சந்திரயான் 2--க்கு விஞ்ஞானி வளர்மதி, சந்திரயான் 3-க்கு விஞ்ஞானி வீரமுத்துவேல் திட்ட இயக்குநர்களாகப் பணியாற்றினர். மேலும் சந்திரயான் 3 குழுவில் பல்வேறு நிலையில் தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் படித்து பட்டம் பெற்ற விஞ்ஞானிகள் பலரும் இடம் பெற்றிருதனர்.

சந்திரயான் 3 விண்கலமானது ஆகஸ்ட் 23-ந் தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டது. இதனால் ஆகஸ்ட் 23-ந் தேதி தேசிய விண்வெளி தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவம் அருகே கால் பதித்த முதல் நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலம் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுண்ட்டன் இன்று தொடங்குகிறது. ஆதித்யா எல்-1 விண்கலமானது, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.
ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநராகவும் தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த விஞ்ஞானி நிகர் சாஜி பொறுப்பு வகிக்கிறார் என்பதில் தமிழ்நாடு பெருமிதம் கொள்கிறது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை சுலைமான்நபி பள்ளிவாசல் ஜமாத் பகுதியைச் சேர்ந்தவர் நிகர் சாஜி. அவரது பெற்றோர் ஷேக் மீரான், சைத்தூன் பீவி ஆகியோராவர். செங்கோட்டை தனியார் பள்ளியில் பயின்று பிளஸ் டூவில் மாவட்ட முதலிடம் பெற்றார். பின்னர் நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் பட்டம் படித்து முடித்தார். பிர்லா இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் மேற்படிப்பை முடித்து இஸ்ரோவில் இணைந்தார் நிகர் சாஜி.
நிகர் சாஜியின் கணவர் ஷாஜகான் துபாயில் பொறியாளராகவும் அவரது மகன் முகம்மது தாரிக் நெதர்லாந்து நாட்டில் விஞ்ஞானியாகவும் பணிபுரிகின்றனர். நிகர் சாஜி- ஷாஜகான் மகள் தஸ்நீம் பெங்களூரில் படித்து வருகிறார்.
இஸ்ரோவின் தேசத்துக்கு பெருமை சேர்க்கும் திட்டங்கள் அனைத்திலும் தமிழர்கள் கொடிநாட்டிப் பறக்கின்றனர்!
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications