"கோட்டையில் ஓட்டை" நிஜமாகவே.. பரபரப்பில் தமிழக தலைமை செயலகம்.. முதல்வர் ஸ்டாலினிடம் போன அதே மேட்டர்
சென்னை: தலைமை செயலகத்தை மாற்ற வேண்டும் என்று மறுபடியும் தமிழக அரசுக்கு அழுத்தமான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் போதிய அளவு இட வசதி இல்லாததால், தலைமைச் செயலகத்தை மாற்ற வேண்டும் என்று அதிகாரிகள் அரசுக்கு மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை.

கடந்த 2006 - 2011ல், திமுக ஆட்சி காலத்தில், சென்னை அண்ணாசாலையில், அரசினர் தோட்டம் அருகே புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.
ஆட்சி மாற்றம்: ஆனால், கடந்த 2011ல், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, திமுக அரசால் கட்டப்பட்ட புதிய தலைமை செயலக கட்டிடத்தை அரசினர் பன்னோக்கு உயர் மருத்துவமனையாக மாற்றினார்.. அத்துடன், பழையபடி ஜார்ஜ் கோட்டைக்கே தமிழக அரசின் தலைமை செயலகத்தையும் மாற்றினார்.
பழைய தலைமை செயலகம்: அப்போதிருந்து, இப்போதுவரைவரை, பழைய தலைமை செயலகத்தில்தான், முக்கிய செயலாளர்களின் அலுவலகங்களும், அமைச்சர்களின் அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. இப்போது, மீண்டும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது.. இந்தசூழலில், தலைமை செயலகத்தை மறுபடியும் ஓமந்தூரார் வளாகத்துக்கே மாற்ற வேண்டும் என்று தலைமைச் செயலக சங்கம் வலியுறுத்தி வருகிறது..
காரணம், இட நெருக்கடி நிலவிவருவதாகவும், போதிய பாதுகாப்பின்மை காரணமாகவும், இந்த கோரிக்கையை எழுப்பி வருகிறார்கள்.. இதனிடையே, தலைமை செயலகத்தில் உள்ள உணவுத்துறை செயலாளரின் ரூமில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வெளியேறியதாகவும், அங்கிருந்த கோப்புகள் எல்லாம் நனைந்துவிட்டதாகவும் தகவல்கள் வந்தன. இதனால் தலைமைச் செயலகம் விரைவில் மாற்றப்படலாம் என்று தகவல்களும் றெக்கை கட்டி பறந்தன.
தலைமை செயலகம்: ஆனால், ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை, தலைமைச் செயலகமாக மாற்றப்படாது என்று தமிழக அரசு விளக்கமளித்திருந்தது.. இதுகுறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 4 நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டி தந்திருந்தார்.
அதில், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை ஒருபோதும் தலைமைச்செயலகமாக மாறாது... 500 முறைக்கும் மேல், இதற்கு நான் பதில் சொல்லிவிட்டேன்.. மருத்துவ தேவை அதிகரித்து வரும் நிலையில், ஓமந்தூரார் மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை என்ற பெயரளவில் மட்டும் இருந்ததை இந்த ஆட்சியில் தான் பல சிறப்பு அம்சங்கள் கொண்டு வரப்பட்டன..
ஆபரேஷன்: இருதய அறுவை சிகிச்சை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்டவை அதிகம் செய்யப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகள் முன்பை விட, ஒரு நாளைக்கு 2000த்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகின்றனர்... அதனால், ஓமந்தாரார் மருத்துவமனை ஒரு காலத்திலும் தலைமை செயலகமாக மாறாது.. இதை எடப்பாடி பழனிசாமியிடம் தைரியமாக சொல்லலாம்" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், இதே கோரிக்கையை தலைமை செயலக பணியாளர்கள் சங்கம் மீண்டும் எழுப்பியிருக்கிறது.. இட நெருக்கடி பெரிய பிரச்சினையாக இருப்பதாகவும், போதிய இடவசதி இல்லாததால் அமைச்சர்கள் துறை ரீதியான கூட்டங்களை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.
தலைமை செயலகம்: தலைமைச்செயலக பணியாளர்களின் இடர்பாடுகளை போக்க அரசின் கொள்கை முடிவை அறிவிக்க வேண்டும் என்று தலைமைச் செயலக பணியாளர்கள் சங்கம், மறுபடியும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இதற்கு அரசு என்ன முடிவெடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications