பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்.. ஏப்.6 ஆம் தேதி வெளியாகும் புதிய வாக்காளர் பட்டியல்!
சென்னை: தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பின் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதில் இடம்பெறுபவர்கள் அனைவரும் வரும் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க முடியும்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் (SIR) பணிகளை மேற்கொண்ட பிறகு இறுதி வாக்காளர் பட்டியல், கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் அடுத்த மாதம் 23 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் வாக்காளர்களை மேலும் சேர்க்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது.

அதன்படி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நாளிலிருந்து மார்ச் 26 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து பெயர் சேர்ப்புக்காக மட்டும் 6 லட்சத்து 48 ஆயிரத்து 285 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவர்களில் 2 லட்சத்து 89 ஆயிரத்து 581 பேர் ஆண்கள். 3 லட்சத்து 58 ஆயிரத்து 500 பேர் பெண்கள். 204 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.
மார்ச் 26 வரை பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான ஏப்ரல் 6 ஆம் தேதி உள்ளபடி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். அந்தப் பட்டியலில் தகுதி வாய்ந்த அனைத்து வாக்காளர்களும் சேர்க்கப்படுவார்கள்.
நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள வாக்காளர் பட்டியல், ஒருங்கிணைந்த பட்டியலாக இருக்கும். இந்த பட்டியல், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட 23.2.2026 தேதியில் இருந்து 26.3.2026 வரை பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட உள்ளது.
வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த காலத்தின்போது மேற்கொள்ளப்பட்ட அனைத்து சேர்க்கைகளையும் உள்ளடக்கியதாக இந்த பட்டியல் இருக்கும்.
வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்ட சேர்க்கைகள், நீக்கங்கள் மற்றும் திருத்தங்கள் குறித்து தனித்தனியாக பட்டியல்கள் வெளியிடப்படுவதில்லை. மாறாக, அனைத்து வாக்காளர்களும் ஒரே வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் வகையில் தயாரிக்கப்பட்ட பட்டியலே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications