சென்னையில் கிட்டத்தட்ட பாதி வாக்காளர்கள் பெயர் நீக்கம்? SIR செய்யும் வேலை.. எங்கு பாதிப்பு அதிகம்?
சென்னை: தமிழ்நாடு முழுவதும் சிறப்புத் தீவிரத் திருத்தம் எனப்படும் சார் பணிகள் நடந்து வருகிறது. வெள்ளிக்கிழமை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும் நிலையில், கிட்டத்தட்ட ஒரு கோடி வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்படும் எனத் தெரிகிறது. குறிப்பாக சென்னையில் 3ல் ஒருவர், அதாவது 35% வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்படும் எனச் சொல்லப்படுகிறது.
பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் தேர்தல் ஆணையாம் சார் எனப்படும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை மேற்கொண்டது. தமிழ்நாட்டில் இரண்டு முறை சார் கடைசித் தேதி நீட்டிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 14ம் தேதி வரை வாக்காளர்கள் தங்கள் சார் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கக் கால அவகாசம் தரப்பட்டது. இந்தச் சூழலில் வரும் வெள்ளிக்கிழமை தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

கிட்டத்தட்ட ஒரு கோடி வாக்காளர்கள்
அதில் தமிழ்நாட்டில் சுமார் 97.4 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. "தொடர்பு கொள்ள முடியாதவர்கள்" என்ற வகையில் இவர்கள் பெயர்கள் நீக்கப்படுகிறதாம். அதிகபட்சமாக 52.6 லட்சம் (54.2%) பேர் நிரந்தர முகவரி மாற்றம் செய்தவர்கள். மேலும், 26.9 லட்சம் (27.7%) இறந்தவர்கள், 13.6 லட்சம் (13.9%) கண்டறியப்படாதவர்கள், 3.98 லட்சம் (4.1%) போலி பதிவுகள், மேலும் 16,400 (0.2%) பேர் பிற காரணங்களால் நீக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் அதிகம்
குறிப்பாக மாவட்டம் வாரியாக பார்க்கும்போது சென்னையில் தான் அதிகபட்ச வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. சென்னையின் இப்போது 40.05 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருக்கும் நிலையில், அது 25.8 லட்சமாகக் குறையலாம். அதாவது வரைவுப் பட்டியலில் 35.6% பேர் பெயர்கள் இடம்பெறாது எனத் தெரிகிறது. அதாவது தற்போது வாக்காளர் பட்டியலில் இருக்கும் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்படுகிறார்கள். சுமார் 14.26 லட்சம் பெயர்கள் நீக்கப்படுகின்றன. அவற்றில் 12.23 லட்சம் (85.8%) பேர் நிரந்தரமாக முகவரி மாற்றம் செய்தவர்கள் ஆவர்.
மற்ற மாவட்டங்கள்
சென்னை மட்டுமின்றி, தமிழ்நாடு முழுக்க 10 மாவட்டங்களில் வாக்காளர் எண்ணிக்கை 15%க்கும் அதிகமாகக் குறையலாம். சென்னை புறநகராகக் கருதப்படும் செங்கல்பட்டில் 27.87 லட்சம் வாக்காளர்களில் சுமார் 7 லட்சம் பெயர்கள் நீக்கப்படும் என தெரிகிறது. அதாவது 25.18% வரை சரியலாம். சென்னைக்கு அடுத்து செங்கல்பட்டில் தான் அதிகச் சரிவு! அதேபோல திருப்பூர் (23.1%) மற்றும் கோவையிலும் (20.2%) அதிகளவில் வாக்காளர்கள் நீக்கப்படுகிறார்கள். திருப்பூரில் உள்ள 24.4 லட்சம் வாக்காளர்களில் 5.6 லட்சம் பெயர்களும், கோவையில் 32.2 லட்சம் வாக்காளர்களில் 6.5 லட்சம் பெயர்களும் நீக்கப்படலாம்.
எங்குக் குறைவு!
காஞ்சிபுரம், திருவள்ளூர், திண்டுக்கல், வேலூர், ஈரோடு, திருநெல்வேலி ஆகிய ஆறு மாவட்டங்களிலும் 15% அதிகமான பெயர்கள் நீக்கப்படுகிறது. மாநிலத்தின் 38 மாவட்டங்களில், 10 மாவட்டங்களில் மட்டுமே நீக்கப்படும் பெயர்களின் சதவீதம் 10%க்கும் குறைவாக உள்ளது. குறைந்த அளவாக அரியலூரில் 4.6% சரிவு மட்டும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் சென்னை, செங்கல்பட்டு, கோவை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், மதுரை, திருப்பூர் போன்ற நகர்ப்புற மாவட்டங்களில் தான் 'கண்டறிய முடியாதவர்கள்', 'இல்லாதவர்கள்' அல்லது 'நிரந்தரமாக முகவரி மாற்றம் செய்தவர்கள்' எனக் குறிக்கப்பட்ட வாக்காளர்களின் சதவீதம் அதிகமாக உள்ளது.
-
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!











Click it and Unblock the Notifications