”ஸ்போர்ட்ஸ் நாதனாகவே மாறிவிட்டார்” மெய்யநாதனை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்.. அதிர்ந்த ஸ்டேடியம்!
சென்னை: தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் "ஸ்போர்ட்ஸ்" நாதனாகவே மாறிவிட்டார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
சர்வதேச, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்ற வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுகளை வழங்கி கவுரவித்தார். அதேபோல் 2018, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கான விளையாட்டு விருதாளர்களுக்கு பரிசுத் தொகையை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு உள்ள சந்தேகங்களை கேட்டறிய "ஆடுகளம்" என்ற புதிய உதவி மையத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த உதவி மையத்தில் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான சந்தேகங்களை தொலைபேசி மூலம் கேட்டறிய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் பேச்சு
இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், கடந்த 3 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு வந்துள்ளேன். இதன் மூலம் தமிழக விளையாட்டுத்துறை, விளையாட்டு வீரர் ஓடும் வேகத்தில் செயல்பட்டு வருவது அனைவருக்கும் தெரிந்து கொள்ளலாம். உலகமே வியந்து பார்க்கும் வகையில் செஸ் ஒலிம்பிட் போட்டியை நடத்திக் காட்டியுள்ளது தமிழக விளையாட்டு துறை.

”ஸ்போர்ட்ஸ் நாதன்”
தற்போது சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியை தொடங்க ஆயத்தமாகி வருகிறது. அமைச்சர் மெய்யநாதன் ஒரு ஸ்போர்ட்ஸ் நாதனாகவே மாறிவிட்டார். தனது துறையை என்றும், எப்போதும் துடிப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார். இப்படி ஒரு அமைச்சர் கிடைத்ததற்கு பெருமை கொள்ள வேண்டும்.

விளையாட்டுத்துறை
திராவிட மாடல் குறிக்கோளின்படி, அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அதில் விளையாட்டுத் துறைக்கு எடுத்துக்காட்டாக இந்த விழா நடைபெற்று வருகிறது. ஒரே விழாவில் 4 முக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வீரர்கள், பயிற்சியாளர்கள் விருது, சர்வதேச, தேசிய வீரர்களுக்கான ஊக்கத்தொகை, முதலமைச்சர் போட்டிகளுக்கான விண்ணப்பம் தொடக்கம், ஆடுகளம் தகவல் மையம் ஆகியவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

நம்ம ஊர் வீரர்கள்
உலகளவில் விளையாட்டுத்துறை தமிழ்நாடு முதன்மை பெற வேண்டும். நம்ம ஊர் வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பதக்கம் பெற வேண்டும். அந்த அளவிற்கு உயரிய நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
-
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications