தீராத கடன் தொல்லையா?.. இந்த வழிபாடு உங்கள் வாழ்க்கையை மாற்றும்.. இதை மட்டும் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாழ்க்கையில் பலரையும் அதிகமாக பாதிப்பது கடன் பிரச்சனையே. வாங்கிய கடனை அடைக்க முடியாமல் மனவேதனையில் தவிக்கும் நபர்கள் ஏராளம். ஆனால், முன்னோர்கள் கூறிய சில ஆன்மீக வழிபாடுகள் மற்றும் குறிப்பிட்ட நாட்களில் செய்யப்படும் பரிகாரங்கள் மூலம் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை. கடன் தீருவதற்கான வழிபாடு முறைகள், கடன் எப்போது வாங்க வேண்டும், எந்த தினங்களில் கடனை அடைக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதாவதொரு கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருப்போம். மனிதனின் பிறவி என்பதே பெரும் கடன் தான். இந்தப் பிறவிக் கடன் தீருவதற்கும், பணம் சம்பந்தப்பட்ட கடன் தீருவதற்கும் அற்புதமான வழியை முன்னோர்கள் வழங்கியிருக்கிறார்கள். எப்போதுமே கடன் வாங்குவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை நாம் யோசிக்க வேண்டும். முந்தைய காலகட்டங்களில் கடன் வாங்குவது என்பது மிகவும் குறைவாகத்தான் இருக்கும்.

Debt Spiritual Remedy

ஆனால், இன்றைய காலகட்டத்தில் நாம் சிறிய சிறிய அத்தியாவசியப் பொருள்களுக்கு கூட கடன் வாங்கும் சூழ்நிலை உள்ளது. கடன் என்பதை தேவையான விஷங்களுக்கு வாங்கலாம். ஆடம்பரப் பொருள் வாங்க, சுற்றுலா செல்வது, மற்றவர்களைத் திருப்திப்படுத்த கடனுக்கு பொருள்களை வாங்குவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. நாம் வாங்கிய கடனை நாமே அடைக்க முடியும் என்கிற நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் கடன் வாங்க வேண்டும்.

கடன் எந்த தினத்தில் வாங்கலாம்

அவ்வாறு கடன் வாங்குபவர்கள் திங்கள்கிழமை கடன் வாங்கலாம். கடனை அடைப்பவர்கள் செவ்வாய்க்கிழமை அடைப்பது நன்மை தரும். இந்த வழக்கத்தை மேற்கொண்டாலே குறைந்தபட்சம் நாம் கடன் தொல்லையில் இருந்து வெளியில் வருவதற்கான நல்ல கால சூழலை ஏற்படுத்தும். கடன் என்பதில் இருந்து வெளியில் வர வேண்டும் என்றால் அதற்கு அருள்புரியக்கூடிய சிவபெருமானாக எழுந்தருளியுள்ள ருண விமோர்ச்சனரை வழிபாடு செய்வது நல்லது.

கடன் தீர வழிபாடு

மார்க்கண்டேயர் வழிபட்ட தெய்வமாகவும் இந்த ருண விமோர்ச்சகர் விளங்குகிறார். ருண விமோர்ச்சகர் என்பது கடனில் இருந்து நம்மை விடுவிக்கக் கூடியவர் என்பது பொருள். திருவாரூர் அருகே உள்ள திருச்சேரை என்கிற திருத்தளத்தில் இந்த ருண விமோர்ச்சகர் நமக்கு அருள்புரிகிறார். திருவாரூரிலேயே தியாகராய சுவாமி எழுந்தருளி அருள் புரியக்கூடிய பெரிய கோயிலிலும் ருண விமோர்ச்சகரர் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். இந்த இரண்டு ஆலயங்களிலும் நீங்கள் சென்று வழிபாடு செய்யலாம். திங்கள்கிழமை அன்று ருண விமோர்ச்சகரை பூஜை செய்து வழிபட்டால் கடனில் இருந்து விடுதலை கிடைக்கும்.

மாலோன் வழிபாடு

கடன் அனைத்தையும் அடைப்பதற்கு இரண்டு தெய்வங்களை வழிபாடு செய்வது அவசியமாகும். மாலோன், மயிலோன் ஆகிய இரண்டு தெய்வங்களை வழிபடும்போது நம்மிடமிருக்கும் அனைத்து கடன்களும் பரிபூரணமாக நிவர்த்திகயாகும். மாலோன் என்பவர் பெருமாள், மயிலோன் என்பவர் முருகர். ஆலயங்களில் அதிக வருமானம் தரக்கூடிய ஆலயம் என்பது வெங்கடச்சாலபதினுடைய திருப்பதி தான்.

நாராயணர் ஸ்ரீனிவாசனாக அவதாரம் செய்கிறார். அப்போது பத்மாவதி தாயாரை திருமணம் செய்வதற்கு குபேரரிடமிருந்து செல்வ நிதியை கடனாக வாங்குகிறார். அந்தக் கடனுக்கான வட்டியைத் தான் நாம் கொடுக்கும் காணிக்கை மூலமாக பெருமாள் குபேரருக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார். கடன் வட்டியினால் எவ்வளவு பெரிய துன்பம் வரும் என்பதை நன்கறிவார் பெருமாள். அதனால், அவரை வழிபாடு செய்வதால் வாழ்க்கையில் கடன் பிரச்சனை தீரும் என்பது ஐதீகம்.

மயிலோன் வழிபாடு

எல்லா திருத்தலங்களிலும் மயிலோன் அருள்புரிந்தாலும் திருவாவினன்குடியில் உள்ள அக்கின தேவனும், பூமி தேவியும் வழிபாடு செய்து நலன் பெற்றிருக்கின்றனர். இந்த திருத்தலங்களில் மகாலட்சுமி தன்னுடைய செல்வ நலன்களை மாப்பிள்ளையாகிய முருகரிடத்தில் கொடுத்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்புரியும் வண்ணமாக மாப்பிள்ளையை உயர்த்திய மாமியாராக அங்கு விளங்குகிறார்.

அந்த முருகப் பெருமானை நாம் வணங்கினால் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கக்கூடிய கடன் தீரும். எங்கும் நிறைந்திருக்க கூடிய முருகப் பெருமானை வணங்கினால் கடன் பிரச்சனை நம்மை விட்டு பரிபூரணமாக நீங்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+