Tamil Nadu SSLC, PLUS 2 exam result 2025: பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?
சென்னை: தமிழகத்தில் 10ஆம் வகுப்பு, 11, ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் அதன் முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2024-2025 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வுகள் கடந்த மார்ச் 3 முதல் மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை 8.21 லட்சம் மாணவர்கள், 3316 தேர்வு மையங்களில் எழுதியிருந்தனர்.

அது போல் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 30 லட்சம் பேர் எழுதியிருந்தனர். தமிழகத்தில் 11 ஆம் வகுப்புக்கும் பொது தேர்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு மே 6ஆம் தேதியும் 2023 ஆம் ஆண்டு மே 8ஆம் தேதியும் இந்த தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இந்த ஆண்டும் மே 6ஆம் தேதி வாக்கில் முடிவுகள் வெளியாகும் என சொல்லப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் கட் ஆஃப் மதிப்பெண்களை வைத்து கல்லூரியில் சேர மாணவர்கள் காத்திருக்கிறார்கள்.
தாங்கள் பெற்ற மதிப்பெண்களை வைத்து அரசு கல்லூரியா இல்லை தனியார் கல்லூரியில் டொனேஷன் கொடுத்து சேர்வதா என்பதை முடிவு செய்வர். எனவே மாணவர்கள் தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பை பெற DGE TN என்ற இணையத்தை பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உங்கள் தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
tnresults.nic.in or dge.tn.gov.in. ஆகிய வெப்சைட்டுகளில் செக் செய்ய வேண்டும். அதில் "TN HSE +2 Result 2025" அல்லது "TN SSLC Result 2025" என்பதை கிளிக் செய்ய வேண்டும். அப்போது ஒரு பேஜ் ஓபனாகும், அதில் தேர்வு எண்ணையும் உங்கள் பிறந்த தேதியையும் கொடுக்க வேண்டும்.
அப்போது உங்களுடைய மதிப்பெண்கள் ஸ்கிரீனில் தெரியும். அதை டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். பிறகு பள்ளியில் ஒரிஜினல் மதிப்பெண் பட்டியல் கிடைக்கும். அதை வைத்து கல்லூரிக்கு விண்ணப்பிக்கலாம். கடந்த ஆண்டு 10ஆம் வகுப்பில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications