சரியாக வார இறுதியில்.. மாபெரும் குட் நியூஸ் சொன்ன போக்குவரத்து துறை.. களமிறங்கிய ஸ்பெஷல் பஸ்.. ஏன்?
சென்னை: தமிழ்நாடு முழுக்க இன்று 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
பொதுவாக நீண்ட விடுமுறை வரும் போதெல்லாம் தமிழ்நாட்டில் சிறப்பு பேருந்துகள் விடப்படுவது வழக்கம். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்வார்கள். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வேலை பார்க்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.
இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பேருந்துகளின் தேவை அதிகரிக்கும். அதிக நெரிசலில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். சமயங்களில் போதிய பேருந்துகள் இல்லாத காரணத்தால் மக்கள் கஷ்டப்படும் அவலமும் ஏற்படும்.

இந்த நிலையில்தான் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் தமிழ்நாட்டில் பண்டிகை நாட்களில் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையில் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 4,449 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோல் கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,183 பேருந்துகளும் இயக்கப்பட்டன.
இந்த நிலையில்தான் தற்போதும் சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளன. அதேபோல் சென்னைக்கு திரும்ப பல்வேறு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த முறை பல லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி தமிழ்நாடு முழுக்க இன்று 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. வார இறுதி நாட்கள், முகூர்த்த நாட்கள் ஆகியவற்றை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முன் பதிவுகள் அதிகரித்ததை அடுத்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி இன்று கோயம்பேட்டில் கூடுதலாக 400 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. அதேபோல் ஞாயிறு இரவு மற்றும் திங்கள் கிழமை இந்த சிறப்பு பேருந்துகள் மற்ற நகரங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்னொரு பக்கம் கோவை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் இருந்து சொந்த ஊர் செல்ல 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
அதேபோல் ஞாயிறு இரவு மற்றும் திங்கள் கிழமை இந்த சிறப்பு பேருந்துகள் மற்ற நகரங்களில் இருந்து இந்த இரண்டாம் கட்ட நகரங்களுக்கு வர பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பேரூந்துகளுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
புதிய பேருந்துகளை: மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பாக 1400 நகர மற்றும் மாநகர பேருந்துகள் வாங்கப்பட்ட உள்ளன.
தமிழ்நாட்டில் அரசு மாநகர பேருந்துகள், நகர பேருந்துகள் மற்றும் விரைவு போக்குவரத்துக்கழகம் சிறப்பாக செயல்பட்டாலும் பேருந்துகள் அவ்வளவு சிறப்பானதாக இருக்காது. கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் அதிநவீன பேருந்துகள் போக்குவரத்துக்கு பயன்படுகின்றன.
ஆனால் தமிழ்நாட்டில் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பாக நவீன பேருந்துகள் வாங்கப்படுவது குறைவாகவே உள்ளது. கர்நாடகாவில் இருக்கும் அரசு விரைவு பேருந்துகள் வேற லெவல் தரத்தில் உள்ளன.
உதாரணமாக கர்நாடகாவின் ஐராவத் போன்ற பேருந்துகள் தனியாரை விட அதிக வசதி கொண்டதாக மக்கள் விரும்பும் விரைவு பேருந்துகளாக உள்ளன. இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பாக விரைவு பேருந்துகளில் அதிரடி மாற்றங்களை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் பேருந்துகளில் இருக்கும் குறைகளை சரி செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி, 600 நகர பேருந்துகள், 800 மாநகர பேருந்துகளை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளனர். விரைவில் இந்த பேருந்துகள் தமிழ்நாட்டு சேவையில் களமிறக்கப்படும்.
இவற்றில் பெரும்பாலான பேருந்துகள் சேலம், மதுரை, கோவை, திருச்சியில்தான் களமிறக்கப்பட உள்ளன. இங்கே செல்லும் பேருந்துகள் நல்ல தரமுடன் இல்லை என்பதால் உடனடியாக அங்கே புதிய பேருந்துகளை களமிறக்க முடிவு செய்துள்ளனர். மொத்தமாக கோவைக்கு மட்டும் 160 பேருந்துகள் புதிதாக வழங்கப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications