அடித்து ஆடும் போக்குவரத்து துறை.. அசத்தலாக மாறும் நகர பேருந்துகள்.. கொங்கு மண்டலம் ஹாப்பி அண்ணாச்சி
சென்னை: தமிழ்நாட்டில் எஸ்இடிசி பேருந்துகளில் மாற்றம் செய்யப்பட்டது போல தற்போது மாநகர, நகர பேருந்துகளிலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
தமிழ்நாடு இந்தியாவில் மிகப்பெரிய பேருந்து போக்குவரத்தை கொண்ட மாநிலம் ஆகும். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவு பேருந்துகள் இயங்குகின்றன. அரசு பேருந்துகள் சிறப்பாக இயக்கப்படுவதும் இங்கேதான்.
ஆனால் அதே சமயம் பல பேருந்துகள் புனரமைக்கப்படாமல் இருக்கின்றன என்ற புகார்கள் அடிக்கடி வைக்கப்படுவது வழக்கம். அதாவது பழைய பேருந்துகளை அப்படியே வைத்து உள்ளனர். இதை புனரமைப்பதே இல்லை என்று புகார்கள் வைக்கப்படுவது வழக்கம்.

இதை மாற்றவே கடந்த சில மாதங்களாக பேருந்துகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழ்நாட்டில் முதல் கட்டமாக எஸ்இடிசி பேருந்துகள் புனரமைக்கப்பட்டன. பச்சை நிறத்தில் சிங்கிள் டோர் கொண்ட எஸ்இடிசி பேருந்துகள் முதல் கட்டமாக மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட்டன.
உள்ளே இருக்கும் சீட்டுகள் மாற்றப்பட்டன. மொத்தமாக இதன் தோற்றம் புதுப்பிக்கப்பட்டது. அதேபோல் உள்ளே இருக்கும் வசதிகளும் மாற்றி புதுமைப்படுத்தப்பட்டன. இது மக்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த எஸ்இடிசி பேருந்துகள் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல் மேற்கு மாவட்டங்களுக்கும் இதேபோல் புதிய பேருந்துகள் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.
நகர பேருந்துகள்: தமிழ்நாட்டில் எஸ்இடிசி பேருந்துகளில் மாற்றம் செய்யப்பட்டது போல தற்போது மாநகர, நகர பேருந்துகளிலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. ஒவ்வொரு மாவட்டம் வாரியாக நகர மற்றும் மாநகர பேருந்துகள் மாற்றம் செய்யப்பட உள்ளன.
உதாரணமாக முதல் கட்டமாக கரூர் உள்ளிட்ட கொங்கு மண்டல தனியார் பணிமனையில் புனரமைக்கப்பட்ட சேலம் கோட்ட அரசு நகரப்பேருந்துகள் மாற்றப்பட்டு உள்ளன. பிரவுன் நிறத்தில் இருந்த பழைய பேருந்துகள் மொத்தமாக மாற்றப்பட்டு புத்தம் புதிய இளம் நீல நிறத்தில் உருவாக்கப்பட்டு உள்ளன. உள்ளே சீட்டுகளும் மாற்றப்பட்டு உள்ளன.
மேற்கு மாவட்டங்களில் முதல் கட்டமாக இந்த பேருந்துகள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து மாநிலம் முழுக்க நகரம் மற்றும் மாநகர பகுதிகளில் இதேபோன்ற பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த பேருந்துகளின் புகைப்படங்களை @tnstcbus வெளியிட்டு உள்ளது. லேசான நீல நிறத்தில் நல்ல கண்கவர் அமைப்புடன் இந்த பேருந்துகள் உள்ளன. பேருந்துகளில் இந்த பக்கம் இரண்டு இருக்கை, அந்த பக்கம் இரண்டு இருக்கை என்று 4 இருக்கை இருக்கும் விதமாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

முன்பக்கம் டிஜிட்டல் போர்ட் வைக்கப்பட்டு பளீச் என்று இருக்கும் விதமாக இந்த பேருந்துகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. உள்ளே சீட்கள் கூட நவீன மாடலில் மாற்றப்பட்டு உள்ளன. விரைவில் இவை போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.,
குறைபாடு: தமிழ்நாட்டில் அரசு மாநகர பேருந்துகள், நகர பேருந்துகள் மற்றும் விரைவு போக்குவரத்துக்கழகம் சிறப்பாக செயல்பட்டாலும் பேருந்துகள் அவ்வளவு சிறப்பானதாக இருக்காது. கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் அதிநவீன பேருந்துகள் போக்குவரத்துக்கு பயன்படுகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பாக நவீன பேருந்துகள் வாங்கப்படுவது குறைவாகவே உள்ளது. கர்நாடகாவில் இருக்கும் அரசு விரைவு பேருந்துகள் வேற லெவல் தரத்தில் உள்ளன.
இதையடுத்து தமிழ்நாட்டில் பேருந்துகளில் இருக்கும் குறைகளை சரி செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி, 600 நகர பேருந்துகள், 800 மாநகர பேருந்துகளை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளனர். விரைவில் இந்த பேருந்துகள் தமிழ்நாட்டு சேவையில் களமிறக்கப்படும்.இவற்றில் பெரும்பாலான பேருந்துகள் சேலம், மதுரை, கோவை, திருச்சியில்தான் களமிறக்கப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications