கைவிரித்த ஆம்னி பஸ்.. தமிழ்நாடு அரசு எடுத்த ஸ்டெப்! சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ்
சென்னை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனத்திற்காக நடை திறக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பன் ஆலயத்திற்கு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டிற்கான சபரிமலை சிறப்பு பேருந்தின் இன்று முதல் தினமும் ஐயப்ப பக்தர்கள் பயன்பெறும் வகையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மதியம் 2 & 2.30 மணியளவிலும் மற்றும் டாக்டர் கலைஞர் பேருந்து முனையத்திலிருந்து மதியம் 2.30 & 3.00 மணியளவிலும் திண்டிவனம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல் மற்றும் குமுளி வழியாக சபரிமலைக்கு தற்போது இயக்கப்படுகிறது. மேலும், பயணிகளின் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். இந்த சிறப்பு பேருந்துகள் பம்பை வரை இயக்கப்படும்.
மேலும், 90 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்புப் பேருந்துகளுக்கு ஆன்லைன் மூலமாக, http://tnstc.in என்ற இணையதளத்திலும் மற்றும் TNSTC அதிகாரபூர்வ மொபைல் செயலி மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு 9445014424 மற்றும் 9445014463 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று அதிகாலை 3 மணிக்கு சன்னிதானம் நடை திறக்கப்பட்டு, மண்டல பூஜைகள் தொடங்கியுள்ளன. இதுவரை 30,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து முடித்துள்ளனர். அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் பெரிய நடை பந்தல், சிறிய நடை பந்தல் போன்ற இடங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகிறார்கள். தினசரி 90,000 பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்












Click it and Unblock the Notifications