குவார்ட்டருக்கு எக்ஸ்ட்ரா பத்து வசூலா? ஒட்டுமொத்தமா தூக்கிருவோம்.. ஊழியர்களுக்கு டாஸ்மாக் கடிவாளம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் டாஸ்மாக் மூலம் செயல்படும் மதுக்கடைகள் விற்பனையாகும் மதுவுக்கு பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வைத்து விற்பனையாவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் மதுவை கூடுதல் விலைக்கு விற்றால் சூப்பர்வைசர் உட்பட கடையில் பணிபுரியும் அனைவருமே பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத் தீர்வு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது இதன் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட மதுபான கடைகளும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் செயல்பட்டு வருகிறது.

government of tamil nadu tasmac

டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் சில்லறை விற்பனை வாயிலாக ஒரு நாளைக்கு சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் நிலையில் வார விடுமுறை மற்றும் தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் பல மடங்கு விற்பனை அதிகரிக்கும்.

குறிப்பாக புத்தாண்டு தீபாவளி பொங்கல் போன்ற நாட்களில் டாஸ்மாக் மது விற்பனை மிக அதிக அளவில் இருக்கும். கொரோனா காலத்தில் கடைகள் மூடப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக கடந்த ஆண்டு சாதாரண நாட்களில் கூட அதிக அளவு மது விற்பனை இருந்தது. குறிப்பாக தீபாவளி சந்தர்ப்பத்தில் 3 அல்லது 4 நாட்களிலேயே தமிழ்நாட்டில் ரூ.750 கோடிக்கும் அதிகமான விற்பனை நடக்கும். புத்தாண்டு, பொங்கல் சமயங்களில் சொல்லவே வேண்டாம்.

இவ்வாறாக தமிழக அரசுக்கு வருவாய் தரும் முக்கிய துறையாக டாஸ்மாக் இருக்கிறது. ஆனாலும் நீண்ட காலமாகவே குடிமகன்களுக்கு ஒரு குறை இருக்கிறது. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவாட்டர், ஆப், ஃபுல் என்ற வகைகளிலேயே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது 180 மில்லி, 360 மில்லி, 720 மில்லி ஆகிய அளவுகளிலேயே மதுபானங்கள் விற்கப்படுகிறது. இதில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வைத்து விற்பனையாவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

அந்த வகையில் பிராந்தி, விஸ்கி, ரம், ஒயின், பீர் என எந்த மது வகைகளை வாங்கினாலும் பத்து ரூபாய் கூடுதலாக வைத்து விற்கப்படுகிறது. இதனால் சேல்ஸ்மேன்களிடம் குடிமகன்கள் பஞ்சாயத்து செய்வதும் அதிகரித்து வருகிறது. மேலும் குவார்ட்டருக்கு பத்து ரூபாய் என வைத்தால் ஒரு ஃபுல்லுக்கு 40 ரூபாய் வரை அதிகம் வசூலிக்கப்படுகிறது. சராசரியாக ஒரு மதுக்கடைக்கு 500 மது பாட்டில்கள் விற்பனையானாலும் ஒரு கடைக்கு 5000 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் 2000க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு மட்டும் பல லட்சம் கூடுதலாக வசூல் செய்யப்படுகிறது. அதே நேரத்தில் மின்சாரம், கட்டிட வாடகை, கூலிங் சார்ஜ் என விற்பனையாளர்கள் ஏதாவது ஒரு காரணம் சொல்கின்றனர். இதனால் குடிமகன்கள் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வரும் சம்பவங்களும் அரங்கேற இருக்கிறது. மேலும் இது தொடர்பாக வீடியோக்களும் வெளியாகும். அந்த கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

வழக்கமாக கூடுதல் விலைக்கு விற்பனை தொடர்பாக புகார் அளித்தால் குறிப்பிட்ட சேல்ஸ்மேன் மீதுதான் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் தற்போது டாஸ்மாக் கடைகளில் மதுவை கூடுதல் விலைக்கு விற்றால் சூப்பர்வைசர் உட்பட கடையில் பணிபுரியும் அனைவருமே பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விசாகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ.10/- அல்லது அதற்கு மேல் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யும் கடைப் பணப்பாளர்கள் மீது பார்வை 7- காணும் நேர்முக கடிதத்தின்படி நடவடிக்கை எடுப்பதுடன் கடைப் பணியிலுள்ள அனைத்து கடை விற்பனையாளர்கள், கடை மேற்பார்வைனர் உட்பட அனைவரையும் கூட்டு பொறுபாக்கி அக்கடைப் பணியாளர்களை உடணடியாக தற்காலிகப் பணி இடைநீக்கம் செய்து தக்க நடவடிக்கை எடுக்க எற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கும் தேர்வுகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகளை அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்களும் மாவட்ட மேலாளர்களும் சிறப்பு பறக்கும் மடை அலுவலர்களும் தவறாது கடைப்பிடிக்குமாறும் இச்சுற்றறிக்கையினை அனைத்து பணியாளர்களுக்கும் சார்பு செய்து வழங்கி ஒப்புதல் பெற்று கோப்பில் பராமரிக்குமாறும் மேற்படி சுற்றறிக்கையினை சார்பு செய்து ஒப்புதல் பெற்றுக்கொண்டமைக்கு மாவட்ட மேலாளர்கள் அளவில் ஒப்புதல் அளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது." என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+