15 வருடத்திற்கு பின் வரும் பூதம்.. மோச்சா புயல் ஆபத்துதான்.. தமிழ்நாட்டிற்கு வேறொரு சிக்கல் இருக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நர்கிஸ் சூறாவளி, தெற்காசியாவில் இயற்கை பேரழிவுகளில் ஏற்பட்ட பெரிய புயல்களில் ஒன்றாக இப்போதும் பார்க்கப்படுகிறது, அந்த புயலை போலவே தற்போது உருவாகி வரும் மோச்சா புயலும் இருப்பதாக வானிலை வல்லுனர்கள் எச்சரித்து உள்ளனர்.

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. நேற்று முதல்நாள் மாலைதான் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது. இது வலிமை அடைந்து வருகிறது.

இது நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலிமை அடையும். அதற்கு மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் . அதை தொடர்ந்து வங்கக்கடலில் வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும்.

Tamil Nadu temperature is going to increase as Mocha Cyclone forming in the Bay of Bengal

இந்த புயலுக்கு மோச்சா என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நர்கிஸ் சூறாவளி, தெற்காசியாவில் இயற்கை பேரழிவுகளில் ஏற்பட்ட பெரிய புயல்களில் ஒன்றாக இப்போதும் பார்க்கப்படுகிறது, அந்த புயலை போலவே தற்போது உருவாகி வரும் மோச்சா புயலும் இருப்பதாக சென்னை ரெயின்ஸ் chennairains வானிலை அமைப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக chennairains பக்கத்தில் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அதில், கடந்த வருடங்களில் இந்திய பெருங்கடலின் வடக்கு பகுதி பல மோசமான புயல்களை சந்தித்து இருக்கிறது. 1970 போலா புயல் பங்களாதேஷைத் தாக்கியது. வங்காளதேசத்தை ஒரு சுதந்திர நாடாக உருவாக்குவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக இந்த புயலும் இருந்தது, 1991 வங்காளதேச புயல் கிட்டத்தட்ட 1.5 லட்சம் மக்களைக் கொன்றது.

1999ல் ஒடிசா சூப்பர் சூறாவளி புவனேஸ்வர் அருகே கடற்கரையைத் தாக்கியதில் 10000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றது. 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நர்கிஸ் சூறாவளி, தெற்காசியாவில் இயற்கை பேரழிவுகளில் ஏற்பட்ட பெரிய புயல்களில் ஒன்றாக இப்போதும் பார்க்கப்படுகிறது.

சரியாக 15 ஆண்டுகளுக்கு முன்பு நர்கிஸ் புயல் மியான்மரின் தென்மேற்கு கடற்கரையில் மே 2 ஆம் தேதி 200 கிமீ வேகத்தில் கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடந்த பின் 2.5 லட்சத்திற்கும் அதிகமான மக்களை வீடற்றவர்களாக மாறினார்கள். அந்த அளவிற்கு பெரிய சேதத்தை இந்த புயல் ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான் தற்போது தெற்கு வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என IMD தெரிவித்து உள்ளது. மியான்மர் கடற்கரையை கடந்த நர்கிஸ் புயலை இந்த சமயத்தில் நினைவு கூற வேண்டி உள்ளது. தற்போது உருவாகும் தாழ்வு பகுதியின் இடம் நர்கிஸ் புயலின் இடத்துடன் ஒத்துப்போகிறது என்று சொல்ல முடியாது.

Tamil Nadu temperature is going to increase as Mocha Cyclone forming in the Bay of Bengal

ஆனால் தற்போது உள்ள தாழ்வு பகுதி உருவான விதம், அது வலிமை அடையும் விதம், அது தற்போது வடகிழக்கு பகுதியில் நகர்ந்து வங்கம் - மியான்மர் நோக்கி வருவதை பார்க்க அப்படியே நர்கிஸ் புயலை போலவே உள்ளது. இரண்டிற்கும் இன்னொரு ஒற்றுமையும் உள்ளது.

நர்கிஸ் புயல் முதல் 24 மணி நேரம் ஸ்டேஜ் 1 வலிமை குறைந்த புயலாக இருந்து பின்னர் ஸ்டேஜ் 4 வலிமை மிக்க புயலாக மாறியது. இதற்கு வங்க கடலில் கடல் மேல் நிலவிய வெப்பநிலை முக்கிய காரணம். அதேபோல் கடலின் மேற்பரப்பு நீர் எதிர்பார்த்ததை விட அதிக ஆழத்திற்கு பரவி இருந்தது. அதாவது வெப்பமான நீர் பரப்பு அதிக ஆழம் வரை இருந்தது. இதனால் நர்கிஸ் புயலின் வலிமை 300 சதவிகிதம் அதிகரித்தது.

ரீட்டா, கத்ரினா புயல்கள் வலிமை அடையவும் இதுவே காரணமாக இருந்தது. தற்போது உருவாகும் தாழ்வு மண்டல பகுதி இருக்கும் இடத்திலும் இதேபோல்தான் வெப்பநிலை மிக அதிகமாக கடலுக்கு மேலே காணப்படுகிறது.

வங்காள விரிகுடாவில் குறிப்பாக மத்திய விரிகுடா மற்றும் அதை ஒட்டிய வடக்கு விரிகுடாவின் சில பகுதிகள் மற்றும் மியான்மர் கடற்கரையின் மேற்கில், வெப்பநிலை அதிகம் உள்ளது. இங்கே கிட்டத்தட்ட 32 ° C உள்ளது. இயல்பை விட கூடுதல் 3 ° C வெப்பநிலை உள்ளது.

இது மே 2008 இல் தாக்கிய நர்கிஸ் புயலை போல அப்படியே இருக்கிறது என்று சொல்ல முடியாது. அப்போது இருந்ததை விட வெப்பம் அதிகமாக இப்போது உள்ளது. இதனால் இந்த புயல் மேலும் வலிமை அடைவதற்கான சூழ்நிலைகள் ஏற்பட்டு உள்ளன. கூடுதல் வெப்பநிலை காரணமாக ஈரப்பதம் அதிகரித்து புயலின் வலிமை மேலும் அதிகரிக்கும்.

Tamil Nadu temperature is going to increase as Mocha Cyclone forming in the Bay of Bengal

தற்போது இருக்கும் வெதர் மாடல்களின்படி இந்த புயல் பெரும்பாலும் சுந்தர்பன் காடு மற்றும் இரர்வாடி டெல்டா பகுதிகளில் கரையை கடக்கலாம். இது மிக தீவிர சூறாவளியாக மாறுவதற்கான வாய்ப்புகள் தற்போது 50% சதவிகிதம் உள்ளது. இது வலிமையான புயலாக கண்டிப்பாக இருக்கும். அதி தீவிர புயலாக மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தீவிர புயலில் இருந்து அதி தீவிர புயல் என்ற நிலை வரை இந்த புயல் கரையை கடக்க வாய்ப்புகள் உள்ளன, என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மைய அதிகாரிகளிடம் விசாரித்ததில், மியான்மர் - வங்கம் இடையே இந்த புயல் கரையை கடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த புயல் தமிழ்நாட்டை தாக்கவில்லை என்றாலும் வேறு சிக்கல் உள்ளது. அதுதான் வெப்பநிலை அதிகரிப்பு.

தமிழ்நாட்டில் இதனால் நாளையில் இருந்து மழை கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கும். இதனால் தீபகற்ப பகுதியில் வெப்பநிலை அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் வட தமிழகத்திலுள்ள சென்னை போன்ற இடங்களில் வார இறுதியில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் வெப்பநிலை 41/42 டிகிரி செல்சியஸைத் தொடக்கூடும் என்று வானிலை மாதிரிகள் தெரிவிக்கின்றன,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+