"காவி ஆடையை கண்டுகொள்ளாமல்.. ஹிஜாப்பிற்கு மட்டும் தடை விதிப்பது ஏன்?" தவ்ஹீத் ஜமாத் சரமாரி கேள்வி
சென்னை: கர்நாடகாவில் கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது தொடர்பாகத் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் முதலில் சில பியு கல்லூரிகளில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டது. இந்த விவகாரம் அப்படியே வேறு சில மாவட்டங்களுக்கும் பரவியது.
கல்லூரி நிர்வாகங்களின் இந்த உத்தரவை எதிர்த்து முஸ்லீம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். ஹிஜாப்பிற்கு ஆதரவாகவும் எதிராகவும் கல்லூரிகளிலேயே போராட்டம் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடகா ஹிஜாப் விவகாரம்
இதையடுத்து முஸ்லீம் மாணவிகள் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்து ராஜ் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று தெரிவித்தனர். மேலும், ஹிஜாப் என்பது இஸ்லாமியச் சட்டத்தில் அத்தியாவசிய விஷயமல்ல என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

தவ்ஹீத் ஜமாத்
இது தொடர்பாகத் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் சென்னை மண்ணடியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துல் கரீம், "இஸ்லாத்தைப் பற்றி அறியாமல் இஸ்லாமியப் பெண்கள் பள்ளி கல்லூரிகளுக்கு புர்கா, ஹிஜாப் அணிந்து செல்லக்கூடாது என்று நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் குரானில் அத்தியாயம் 33 வசனம் 59-ல் பெண்கள் தங்கள் பாதுகாப்புக்காகத் தலையில் ஹிஜாப் அணிய வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதை நீதிபதிகளிடம் சுட்டிக் காட்டிய பிறகும் நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

சீருடையை மறுக்கவில்லை
பள்ளியில் சீருடையை மறுக்கவில்லை, சீருடை அணிய மாணவிகள் தயங்கவில்லை, அதோடு சேர்ந்து தலையில் ஹிஜாப் அணிய மட்டும் தான் அனுமதி கேட்கிறார்கள். அதையும் இந்த பாஜக அரசு மறுக்கிறது. பிற மதத்தைச் சார்ந்தவர்கள் மாலை, பூணூல், காவி ஆடை அணிந்து வருவதை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து வர மட்டும் தடை விதிக்கப்படுவது ஏன்.

ஓவைசி
சிறுபான்மை மக்களின் நம்பிக்கைக்கு உரிய இடம் நீதிமன்றம் தான், ஆனால் அந்த நம்பிக்கையை உடைக்கும் விதமாக இந்த தீர்ப்பு உள்ளது. இதற்கு பாஜக தான் முழு காரணம். ஓவைசி போன்ற சில அமைப்புகள் இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாத்திற்கும் எதிராகச் செயல்படுகின்றன. மேலும் தமிழகத்தில் பாஜகவில் இருக்கும் சில இஸ்லாமியர்கள் பெயரளவில் மட்டுமே இஸ்லாமியர்களாக உள்ளார்கள். அவர்கள் இஸ்லாத்தில் கூறப்பட்டிருக்கும் வழிகளைக் கடைப்பிடிக்காத போது அவர்கள் இஸ்லாமியர்களாக இருக்க முடியாது.

மேல்முறையீடு செய்யப்படும்
நீதிமன்றத்தின் மூலம் ஏமாற்றி பாபர் மசூதியைப் பெற்றுக்கொண்டார்கள். மேலும் முத்தலாக் சட்டம், சி.ஏ.ஏ சட்டம் என்று தொடர்ந்து இன்று ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது இஸ்லாமியர்களிடையே மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுத்தும். இது தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடைபெறும். மேலும் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்" என்றும் அவர் தெரிவித்தார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications