Nike முதல் கூச்சி வரை.. உலகத்தின் கால்களை அலங்கரிக்கும் "தமிழ்நாடு".. நாம்தான் இனிமே நம்பர் 1!
சென்னை: இந்தியாவில் காலணி உற்பத்தியில் நம்பர் 1 இடத்தில் தமிழ்நாடு உள்ளது. இதில் சர்வதேச அளவில் முதல் இடத்தில் உள்ள வியட்நாமை தமிழ்நாடு பின்னுக்கு தள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் முதலீடுகளை கண்காணிக்க, முதலீடுகளை ஊக்குவிக்க The Guidance Bureau என்ற பிரிவு அரசு மூலம் இயக்கப்பட்டு வருகிறது. முதலீடுகளை கண்காணிக்க, ஊக்குவிக்க, அனுமதி அளிக்க, ஈர்க்க உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும் ஒற்றை பிரிவாக இந்த The Guidance Bureau செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பு மூலம் தமிழ்நாட்டிற்கு பல்வேறு முதலீடுகள் குவிந்து வருகின்றன. தமிழ்நாடு 1 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைய மிகப்பெரிய அளவில் முயற்சிகளை செய்து வருகிறது. அதில் மேக் இன் தமிழ்நாடு திட்டம் மிக முக்கியமானதாக உள்ளது.
மேக் இன் தமிழ்நாடு திட்டம் வேகம் எடுத்து வரும் நிலையில், இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் கடந்த வருடம் தமிழ்நாடு 8.40 சதவிகித பங்களிப்பை கொடுத்துள்ளது. ₹1.90 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இந்தியாவில் தற்போது வாகனங்கள், ஜவுளி மற்றும் ஆடைகள், தோல், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்ட இரசாயனங்கள், மின்னணுவியல், இயந்திரங்கள் மற்றும் உலோகப் பொருட்கள் உற்பத்தி துறையில் தமிழ்நாடுதான் முன்னிலை வகிக்கிறது.
அந்த வகையில் தற்போது காலணி துறையிலும் தமிழ்நாடு முத்திரை பதித்து உள்ளது. இந்தியாவின் காலணி உற்பத்தியில் 25% உற்பத்தியை தமிழ்நாடுதான் பூர்த்தி செய்கிறது. அதோடு இந்தியாவில் காலணி ஏற்றுமதியில் 45% தமிழ்நாடு பங்கு வகிக்கிறத.
Giorgio Armani மற்றும் Gucci உள்ளிட்ட பிராண்டுகள் தங்கள் தயாரிப்புகளை தமிழ்நாட்டில்தான் தயாரிக்கின்றன அல்லது தமிழ்நாட்டில் இருந்து மூலப்பொருட்களை பெறுகின்றன.
தைவான் முதலீடு:
நேற்றுதான் தைவானைச் சேர்ந்த Pou Chen கார்ப்பரேஷன் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹை க்ளோரி ஃபுட்வேர் இந்தியா பிரைவேட். லிமிடெட் என்று மாபெரும் காலணி நிறுவனம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் முதலீடு செய்துள்ளது. தோல் அல்லாத பெரிய காலணி உற்பத்திப் பிரிவை அமைக்க தமிழகத்தில் ரூ.2,302 கோடி முதலீடு செய்ய உள்ளது.
இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்து ஆனது. முதல்வர் ஸ்டாலின் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அடுத்த 12 ஆண்டுகளில் மாநிலத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த போகிறது. தோல் அல்லாத காலணி துறையில் 20,000 பேருக்கு வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக சர்வதேச அளவில் காலணி துறையில் தமிழ்நாடு லீடராகும் நிலை ஏற்பட்டு உள்ளது. மக்கள் பயன்படுத்தும் பிரபல காலணிகளான கூச்சி, நைக்கி, ரீபோக் போன்ற நிறுவனங்கள் எல்லாம் இந்த நிறுவனம் வழியாகவே காலணிகளை தயாரிக்கின்றன.
இனி உலகத்தில் பல பிரபலங்களின் காலணிகளை தமிழ்நாடு உருவாக்க போவது குறிப்பிடத்தக்கது. சீனாவிற்கு செல்ல வேண்டிய தாய்லாந்தின் இந்த முதலீடு தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது.
இது போக ராணிபேட்டையில் உற்பத்தி செய்யப்படும் காலணிகள் உலகம் முழுக்க ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. உலக அளவில் இதனால் ராணிப்பேட்டை கவனிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல காலணி நிறுவனமான ஹோங் பூ எனப்படும் நிறுவனம் ராணிப்பேட்டையில் முதலீடு செய்ய உள்ளது.
தைவானை சேர்ந்த இந்த நிறுவனம் ராணிப்பேட்டையில் முதலீடு செய்து, அதன்பின் உலகம் முழுக்க ஏற்றுமதி செய்ய உள்ளது. இதற்காக ராணிப்பேட்டையில் 130 ஏக்கர் நிலத்தை அரசிடம் இருந்து அந்த நிறுவனம் வாங்கி உள்ளது.
இந்த நிறுவனம் மூலம் ராணிப்பேட்டையில் உள்ள 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.
இப்போது இந்தியாவில் காலணி உற்பத்தியில் நம்பர் 1 இடத்தில் தமிழ்நாடு உள்ளது. இதில் சர்வதேச அளவில் வியட்நாம் முதல் இடத்தில் உள்ள நிலையில், விரைவில் வியட்நாமை தமிழ்நாடு பின்னுக்கு தள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications