தமிழகத்தில் 4 புதிய அரசு கல்லூரிகள்.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட குட் நியூஸ்! எங்கெல்லாம் தெரியுமா
சென்னை: தமிழகத்தில் மேலும் 4 புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். கிராமப்புற மாணவ மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன.
கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் உயர் கல்வி பெறும் வகையில் 4 புதிய கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் உயர் கல்வி பெறும் வகையில் 2025-26 கல்வி ஆண்டில் 4 புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கேவி குப்பம் (வேலூர்), துறையூர் (திருச்சி), உளுந்தூர் பேட்டை (கள்ளக்குறிச்சி), செங்கம் (திருவண்ணாமலை) ஆகிய இடங்களில் கல்லூரிகள் தொடங்க உள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவ மாணவிகளுக்கு பயன் அளிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications