"ஹை ஸ்பீட்" வந்தே பாரத்.. 2 மடங்கு வேகத்தில் பறக்க போகும் ரயில்கள்.. தமிழ்நாட்டிற்கு ஜாக்பாட்தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் அதிக மக்கள் ரயிலில் பயணம் செய்ய கூடிய அதிக டிராபிக் நிறைந்த பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய அரசு புதிய டிராக்கிங் சிஸ்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இதற்காக ரூ.4.2 லட்சம் கோடி மெகா திட்டத்தை இந்திய ரயில்வே முன்மொழிந்துள்ளது.

டெல்லி-ஹவுரா, மும்பை-ஹவுரா, டெல்லி-மும்பை, டெல்லி-குவஹாத்தி, டெல்லி-சென்னை, ஹவுரா-சென்னை மற்றும் மும்பை-சென்னை ஆகிய ரூட்டுகளில் இந்த ரயில்களை ஆய்வு செய்வது, பயணிகள் எண்ணிக்கையை ஆய்வு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்வார்கள்.

Tamil Nadu to get more trains and high speed Vande Bharat trains soon

வேகமான பயணிகள் ரயில்களை கூடுதலாக இயக்குவது மற்றும் சரக்குகளை விரைவாக இயக்குவதற்கு வசதியாக இந்த ஆய்வுகள் செய்யப்படும். 2024-25 முதல் 2023-34 வரையிலான அடுத்த 10 ஆண்டுகளில் இந்தத் திட்டமானது, இந்த வழித்தடங்களின் ஆய்வுகளை செய்ய உதவும். ஏற்கனவே இங்கு இரண்டு டிராக் உள்ள நிலையில் தேவைப்பட்டால் மூன்றாவது மற்றும் நான்காவது வழித்தடத்தை அமைப்பதை பற்றி இந்த திட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

என்ன திட்டம்: அதன்படி அடுத்த 10 ஆண்டுகளுக்கு இங்கே ஆய்வுகளை மேற்கொள்ளுவார்கள். போக்குவரத்து தேவை உள்ளிட்ட பல விஷயங்களை மனதில் வைத்து இங்கே புதிய டிராக் அமைப்பது, கூடுதல் ரயில் விடுவது, அதிவேக ரயில் விடுவது போன்ற முடிவுகளை எடுப்பர். டெல்லி-சென்னை, ஹவுரா-சென்னை மற்றும் மும்பை-சென்னை ஆகிய ரூட்டுகளில் இந்த முடிவுகளை எடுப்பார்கள்.

இத்திட்டத்தின் கீழ் மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதைகள் கட்டுவதும் அடங்கும். அதிகபட்சமாக மணிக்கு 220 கிமீ வேகத்தில் ஸ்லீப்பர் வசதியுடன் கூடிய நவீன வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ள நேரத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது.

ஏற்கனவே இந்த வழித்தடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய 213 திட்டங்களை ரயில்வே கண்டறிந்துள்ளது. இதில் 200 பணிகள் முதல் கட்டத்தில் முடிக்கப்படும். விரைவான முடிவெடுப்பதற்காக, தேசிய போக்குவரத்து நிறுவனம் ரயில்வே வாரியம் மற்றும் அமைச்சருக்கு அதிக நிதி அதிகாரங்களை அமைச்சரவை வழங்கி உள்ளது. இதனால் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்ப்படுகிறது.

வந்தே பாரத் சேவைகள்: தமிழ்நாட்டிலும் வந்தே பாரத் ரயில் பல்வேறு சேவைகளை கொண்டு உள்ளது. சமீபத்தில் திருநெல்வேலி மற்றும் சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் இரண்டு நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை தற்போது 11-12 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரத்திற்கும் குறைவாகக் கொண்டு வரும்.

இது போக விஜயவாடா மற்றும் சென்னை இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே ஒரு உள் மாநில வந்தே பாரத் சேவை உள்ளது. அதாவது சென்னை - கோவை இடையே உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும். இது போக மாநிலத்திற்கு வெளியே ஒரு வந்தே பாரத் சேவை உள்ளது. மேலும் சென்னை - பெங்களூர் - மைசூர் வரை உள்ளது.

வந்தே பாரத் சாதாரண ரயில்: இப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது வந்தே பாரத் சாதாரண ரயில் கொண்டு வரப்பட உள்ளது. வந்தே பாரத் சாதாரண் ரயில் என்பது சாதாரண மக்கள் பயணிக்கும் வந்தே பாரத் ரயில் என்பதை குறிப்பது ஆகும். இதில் ஏசி இல்லாத 8 கோச்சுகள் கொண்ட சேவை தொடங்கப்பட உள்ளது. 12 மூன்றாம் தர ஏசி கோச்சுகள், 2 முதல் தர ஏசிகளும் கொண்ட 22 பெட்டி ரயில் ஆகும். தற்போது இருக்கும் வந்தே பார்த் ரயிலில் உள்ளது போன்ற அதே வசதிகள் இதிலும் இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+