வேகாத வெயிலில் இனி நிற்க வேண்டாம்.. வீடு தேடி வரும் ரேசன் பொருட்கள்! அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்.!
சென்னை: வீடுகளுக்கே நேரடியாக ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் திட்டம் தமிழகத்தில் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் உணவுத்துறை அதிகாரிகள் நாளை ஆய்வு செய்யவுள்ள நிலையில், உணவுத்துறை அதிகாரிகளின் அறிக்கையின் படி, முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எழுப்பிய கேள்விக்கு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.
திமுக, அதிமுக இரு கட்சிகளுமே பொது விநியோகத் திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. இந்த நிலையில் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்குவது குறித்து பிற மாநிலங்களில் ஆய்வு செய்ய உள்ளதாகவும் விரைவில் இந்த திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் எனவும் உறுதி அளித்திருக்கிறார் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி.

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் நடைபெற்று வரும் நிலையில் நாகர்கோயில் எம்எல்ஏ காந்தி, "ஏழை தொழிலாளர்கள் காலையில் வேலைக்கு சென்றால் மாலையில் தான் வீடு திரும்புகிறார்கள். மேலும் முதியவர்களும் ரேஷன் கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது எனவே வாகனங்கள் மூலம் ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் திட்டம் கொண்டு வர முடியுமா?" என கேட்டார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் சக்கரபாணி, "ரேஷன் கடைகள் மாதம் முழுவதும் திறந்து இருக்கின்றன. அதனால் எப்போது வேண்டுமானாலும் மக்கள் பொருட்களை வாங்கிச் செல்லலாம். மேலும் ஏதாவது ஒரு இடத்தை குறிப்பிட்டால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான செங்கோட்டையன், "வேலைக்குச் சென்று விட்டு இரவு லேட் ஆக வரும் மக்கள் பயன்பெறும் வகையில் கர்நாடகா மாநிலத்தில் ஆங்காங்கே பெரிய மளிகை கடைகளில் மக்கள் பொருட்கள் வாங்கும் போது ரேஷன் பொருட்கள் வழங்கும் வசதியும் செய்யப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுமா?" என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, "ஆந்திராவில் இதே போல வீடுகளுக்கே சென்று பொருள்கள் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இருபதாம் தேதி உணவுத்துறை அதிகாரிகள் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் பிற மாநிலங்களுக்கு சென்று ரேஷன் கடைகள் பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்த இருக்கிறார்கள். அவர்கள் வந்து அறிக்கை தந்த பின்னர் அதனை ஆய்வு செய்து அந்த திட்டங்களை செயல்படுத்தலாம் என்று முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு முடிவெடுக்கப்படும்" என கூறியுள்ளார்.

ரேசன் கடைகள்: தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கூட்டுறவுத் துறை மற்றும் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறையின் கீழ் ரேஷன் கடைகள் இயக்கப்பட்டு வருகிறது, இதன் மூலம் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் சென்னை உள்ளிட்ட 38 மாவட்டங்களில் 34 ஆயிரத்து 792 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 33,000 கடைகள் நேரடியாக கூட்டுறவு துறை மூலம் நடத்தப்படுகிறது.
ஒரு பகுதியில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு குறைவாக உள்ள பகுதிகளில் 18,782 முழு நேர ரேஷன் கடைகளும், பகுதி நேரமாக 9388 ரேஷன் கடைகளும் இயங்கி வருகின்றன. ஆயிரத்திற்கும் மேல் குடும்ப அட்டைகள் கொண்ட பகுதிகளில் முழு நேரமாக 4,352 ரேஷன் கடைகளும் செயல்படுகின்றன. இதன் மூலம் தமிழகம் முழுவதும் 2 கோடியே 23 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலம் சுமார் 7 கோடி பயனாளிகள் பயன் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications