லட்டு மாதிரி 3 நாள் லீவு! ஊருக்கு போக ரெடி தானே? கூட்டம் அள்ளுமே! போக்குவரத்துத்துறையின் அறிவிப்பு
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதியும், சனி ஞாயிறு காரணமாக 16, 17 என மூன்று நாட்கள் இந்த வார இறுதியில் தொடர் விடுமுறை வருகிறது. இதை அடுத்து சென்னையைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால், கூட்ட நெரிசலை தவிர்க்க தமிழக அரசின் போக்குவரத்துத் துறை சார்பில் கூடுதலாக 2500 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல 16ஆம் தேதி சனிக்கிழமை கிருஷ்ண ஜென்மாஷ்டமி வருகிறது. அதோடு சனி, ஞாயிறு என்பதால் 16, 17 ஆகிய நாட்களில் விடுமுறை வழக்கம் போல் இருக்கிறது.
சென்னையை பொருத்தவரை இரண்டு கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் நிலையில் பெரும்பாலானோர் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள்தான். குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர். சனி, ஞாயிறு போன்ற வார விடுமுறை நாட்களில் வழக்கமாக சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

தொடர் விடுமுறை
இந்த முறை மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் பொதுமக்கள் அதிக அளவில் தென் மாவட்டங்களுக்கு பயணிப்பார்கள். பள்ளிகளுக்கும் விடுமுறை என்பதால் குடும்பம் குடும்பமாக தென் மாவட்டங்களை நோக்கி செல்வார்கள். இதனால் பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதி காணப்படும். இதற்காக தமிழக அரசின் போக்குவரத்துத்துறை சார்பில் சுமார் 2500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சிறப்பு பேருந்துகள்
நாளை முதல் சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பெங்களூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. நேரில் வருவதை தவிர்த்து இணையதளம் மற்றும் செல்போன் செயலி மூலம் பயணிகள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை கேட்டுக் கொண்டுள்ளது.
போக்குவரத்துத் துறை
இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில்," 15/08/2025 அன்று சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 13/08/2025 அன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம்
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை. திருச்சி. கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர். சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 13/08/2025 (புதன்கிழமை) அன்று 375 பேருந்துகளும் 14/08/2025 (வியாழக்கிழமை) அன்று 570 பேருந்துகளும், 15/06/2025 (வெள்ளிக் கிழமை) மற்றும் 16/08/2025 (சனிக்கிழமை) 375 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோயம்பேடு
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை. நாகை. வேளாங்கண்ணி, ஒசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 14/08/2025 வியாழக்கிழமை அன்று 100 பேருந்துகளும் மற்றும் 15/08/2025 வெள்ளிக் கிழமை அன்று 90 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.பெங்களூர், திருப்பூர். ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாதவரம்
மாதவரத்திலிருந்து 14/08/2025 மற்றும் 15/08/2025 ஆகிய இரு நாட்களுக்கு 24 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருத்தும் 17/08/2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 715 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
வார இறுதி
இந்நிலையில், இந்த வார இறுதியில் புதன் கிழமை அன்று 8,145 பயணிகளும், வியாழக்கிழமை அன்று 28,534 பயணிகளும், வெள்ளிக்கிழமை அன்று 5,004 பயணிகளும். சனிக்கிழமை 3,678 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 23,266 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு முன்பாகவே தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சிறப்பு பேருந்து இயக்கம்
இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது" என கூறப்பட்டுள்ளது.
-
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications