தமிழகத்தில் ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது..
சென்னை: தமிழகத்தில் மேலும் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கொரோனாவால் 8 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் சராசரியாக ஒவ்வாரு நாளும் 600 பேருக்கு அதிகமாக புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. சென்னையில் தினமும் 500க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16277ஆக உயர்ந்துள்ளது. வெறும் இரண்டு வாரத்தில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பபட்டுள்ளது.

10ஆயிரத்தை தாண்டியது
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு குறைந்து வரும் நிலையல் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு கடுமையாக உள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 587 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10576 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டில் 46 பேருக்கும், கடலூரில் 3 பேருக்கும் அரியலூரில் ஒருவருக்கும் இன்று புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் 21 பேர்
மேலும் காஞ்சிபுரத்தில் 21 பேருக்கும், கன்னியாகுமரியில் 2 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 15 பேருக்கும், மதுரையில் 6 பேருக்கும், புதுக்கோட்டையில் ஒருவருக்கும், ராமநாதபுரத்தில் ஒருவருக்கும், ராணிப்பேடடையில் 2 பேருக்கும், தஞ்சாவூரில் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனியில் 4 பேருக்கும், திருவள்ளூரில் 34 பேருக்கும், திருவண்ணாமலையில் 4 பேருக்கும், திருவாரூரில் 2 பேருக்கும், தூத்துக்குடியில் 11 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகரில் 13 பேருக்கும், விமான நிலைய கண்காணிப்பில் 2 பேருக்கும, ரயில்வே கண்காணிப்பில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகம் பேர் குணம்
தமிழகத்தில் இன்று மட்டும் 833 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக இதுவரை தமிழகத்தில் 8324 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் 7839 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் சென்னையில் தான் மிக அதிகமாக 5653 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

11,584 பேருக்கு சோதனை
இன்று மட்டும் 12275 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 409615 சாம்பிள்கள் (மே 24 நிலவரப்படி) இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தனிநபர் என்று பார்த்தால் இன்று மட்டும் 11,441பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 24ம் தேதியான இன்றுடன் சேர்த்து இதுவரை 3,91,252 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

111 இதுவரை மரணம்
தமிழகத்தில் கொரோனாவால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. 50 வயதாகும் நபர் செங்கல்பட்டில் 22ம் தேதி இறந்தார். திருவள்ளூரைச் சேர்ந்த 65 வயது நபர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 22ம் தேதி உயிரிழந்தார். 62 வயது நபர் சென்னையில் 23ம் தேதி உயிரிழந்தார். 53 வயது ஆண் சென்னை ஸ்டான்லி மருத்துவமைனையில் 23ம் தேதி, 60 வயது பெண் சென்னையில் 23ம் தேதி உயிரிழந்தார். 46 வயது ஆண் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 23ம் தேதி உயிரிழந்தார்.

ஆண்கள் மிக அதிகம்
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 765 பேரில் 464 பேர் ஆண்கள், 301 பேர் பெண்கள் ஆவர், ஒட்டுமொத்தமாக 10340 ஆண்களும், 5932 பெண்களும், 5 திருநங்கைகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தற்போதைய நிலையில் 5643 பேர் கொரோனா அறிகுறிகளுடன் ஐசலேசன் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். 7839 பேர் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
-
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications