Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விடிய விடிய கொட்டிய கனமழை..காவிரியில் பெருகிய வெள்ளம்..4 நாட்களுக்கு கனமழை நீடிக்குமாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பல ஊர்களில் நள்ளிரவில் மழை கொட்டித்தீர்த்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சூலக்கரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இன்றைய தினம் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளபடி தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நேற்றிரவு கனமழை பெய்தது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் ஓடைகளான மாங்கனி ஓடை, சங்கிலி பாறை, வழுக்குப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்து ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அணைக்கு நீர்வரத்து

அணைக்கு நீர்வரத்து

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த தொடர்மழையினால் பிளவக்கல் பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 38.39 அடியாக உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னரே மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காவிரியில் வெள்ளம்

காவிரியில் வெள்ளம்

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம், காலை 3:30 மணிக்கு 120 அடியை எட்டியது. இதனை அடுத்து, 12.10.22 காலை 5:30 மணி முதல், மேட்டூர் அணையில் இருந்து அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம் மூலம் 23,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணை நிரம்பியதால் , அணைக்கான நீர்வரத்து முழுவதும், அணையிலிருந்து வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை

வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கி கால்வாய் அமைந்துள்ள தங்கமாபுரி பட்டினம், அண்ணா நகர், பெரியார் நகர் பகுதிகளில் வருவாய்த் துறையினர் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

படகு போக்குவரத்து நிறுத்தம்

படகு போக்குவரத்து நிறுத்தம்

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் கூடுதலான அளவில் உபரி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதியில் செயல்பட்டு வந்த விசைப்படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு அதன் வாயிலாக மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கதவணை நீர்தேக்க பரப்பில், சேலம் மாவட்டத்தின் எல்லையான பூலாம்பட்டி மற்றும் மறுகரையில் உள்ள ஈரோடு மாவட்டம், நெருஞ்சிப்பேட்டை பகுதியை இணைக்கும் வகையில் விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதில் இரு மாவட்டங்களையும் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் அதிக எண்ணிக்கையில் விசைப்படகு போக்குவரத்தினை பயன்படுத்தி வருகின்றனர்.

திருச்சியில் வெள்ள அபாய எச்சரிக்கை

திருச்சியில் வெள்ள அபாய எச்சரிக்கை

தண்ணீா் வரத்து அதிகரிக்கவுள்ளதால் திருச்சி காவிரி, கொள்ளிடக் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளார். இதுதொடா்பாக திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேட்டூா் அணையின் நீா் மட்டம் 120 அடியைக் கடந்துள்ளது. மேலும், அணையிலிருந்து உபரிநீா் காவிரியில் திறந்துவிடப்படுகிறது. வியாழக்கிழமை 60 ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு எந்த நேரத்திலும் அதிகரிக்கக் கூடும். தொடா் மழையும் எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, காவிரி, கொள்ளிடக் கரையோர மக்கள், தாழ்வான பகுதிகளில் வசிப்போா் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காவிரிக் கரையோரத்திலுள்ள சலவைத் தொழிலாளா்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

பாதுகாப்பான இடங்கள்

பாதுகாப்பான இடங்கள்

நீா்வரத்து விவரங்களை அவ்வப்போது தெரிந்து கொண்டு கால்நடைகளையும், உடமைகளையும் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். காவிரி, கொள்ளிடத்தில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, பொழுதுபோக்கவோ செல்லக் கூடாது. பாதுகாப்பு இல்லாத கரையோரப் பகுதிகள், ஆபத்தான இடங்களில் நீா்நிலைகள் அருகே நின்று செல்பி எடுக்கக் கூடாது. பொதுமக்களின் பாதுகாப்புக்கு வருவாய்த் துறையினரும், பேரிடா் மேலாண்மைத் துறையினரும் தயாா் நிலையில் உள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்

4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்

தமிழகத்தில் இன்றைய தினம் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் தமிழகத்தில் கனமழை

தென் தமிழகத்தில் கனமழை

நாளை முதல் 17 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழக மாவட்டங்கள் மற்றும் வட உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+