இந்த ஆவணம் உங்ககிட்ட இருக்கா.. அப்போ மாதமாதம் ரூ.1500.. உங்களை தேடி வரும்.. தமிழக அரசு சிக்ஸர்
சென்னை: தமிழக அரசு ஆதரவற்ற திருநங்கைகளுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தகுதியுடைய திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1,500 நிதி உதவி வழங்கப்படும். செப்டம்பர் மாதத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு நிலையான நிதி ஆதரவை வழங்குவது ஆகும். இதன் மூலம் அவர்கள் சுயமரியாதையுடன் வாழ வழிவகை செய்யப்படுகிறது.

திருநங்கைகளுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம்
விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்கு மேற்பட்ட திருநங்கையாக இருக்க வேண்டும். திருநங்கைகள் நல வாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஆதார் அட்டை, வயதுச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் கட்டாயம். மேலும், குடும்ப அட்டை வைத்திருக்க வேண்டும்.
முக்கியமாக, குடும்ப உறுப்பினர்களாலோ அல்லது வேறு எந்த நபர்களாலோ நிதி உதவி பெறாத ஆதரவற்ற திருநங்கைகளாக இருத்தல் அவசியம். இத்திட்டத்தைப் பெற விரும்பும் திருநங்கைகள், தங்கள் மாவட்ட சமூக நல அலுவலரை அணுகி தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். இதன் மூலம் மாதந்தோறும் ரூ.1,500 வங்கிக் கணக்கில் பெற முடியும்.
ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிகள்
ஒவ்வொரு மாதமும் இதில் புதிய பயனாளிகள் சேர்க்கப்படுவார்கள். செப்டம்பர் மாதத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம்.
இதற்கிடையே, தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. கடந்த தமிழக பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த விரிவாக்கத்தின் மூலம், கடந்த முறை நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும், சில புதிய பிரிவினருக்கும் விண்ணப்பிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 6 லட்சம் பேரில் கிட்டத்தட்ட எல்லோருக்கும் பணம் கிடைக்கும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 13 லட்சம் பேர் விண்ணப்பம் செய்தனர்.
அதில் 6 லட்சம் பேர் வரை மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பம் செய்தனர். இதில் 90 சதவிகிதம் பேர் அல்லது அதற்கு மேல் உள்ளவர்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உங்களுடன் ஸ்டாலின்
கடந்த ஒரு மாத காலமாக இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களும் படிப்படியாக ஆய்வு செய்யப்படுகின்றன. இத்திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் மனுவின் நிலையை https://kmut.tn.gov.in/ என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் அறிந்துகொள்ள முடியும்.
தமிழக அரசு வெளியிட்ட தகவல்படி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம்களில் மொத்தம் 12.65 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. இதில், மகளிர் உரிமைத் திட்ட நிதியுதவி கோரி 5.88 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். பெறப்பட்ட அனைத்து மனுக்களும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த 45 நாட்களுக்குள் இந்த மனுக்களுக்குத் தீர்வு காணப்படும் என அரசு அறிவித்துள்ளது. மனுக்களின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.












Click it and Unblock the Notifications