மஞ்ச மஞ்சளாக மாறுகிறது தமிழக அரசு பஸ்கள்.. அடுத்தடுத்த மாற்றத்தை நோக்கி போக்குவரத்து கழகம்.. சூப்பர்
சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் புதிய புதிய மாற்றத்தை நோக்கி நடைபோட்டு வருகிறது. அந்தவகையில், இப்போதும் புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
நீண்டதூர பேருந்து பயணம் என்றாலே, தமிழ்நாட்டை பொறுத்தவரை தனியார் நிறுவனங்கள்தான் சிறப்பான சேவைகளை வழங்கி வருவதாக பயணிகள் நினைக்கிறார்கள். காரணம், அரசு பேருந்துகளில் போதுமான அளவு வசதிகளும், முறையான பராமரிப்பும் இல்லை, அத்துடன், தாமதமாக செல்கின்றன என்பது போன்ற குற்றச்சாட்டுகள் பரவலாக உள்ளது.

இந்த கருத்துக்களை மாற்றியமைக்கும் வகையில், தமிழக அரசு அடுத்தடுத்த அதிரடிகளை கையில் எடுத்தது.. குறிப்பாக, தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் உள்ள பேருந்துகளை புனரமைத்து, தனியார் பேருந்துகளுக்கு இணையான அளவில் சேவைகளை வழங்க முடிவு செய்யப்பட்டது..
டெண்டர்கள்: அத்துடன் போதுமான அளவுக்கு, புதிய பஸ்களையும் வாங்கவும், ஏசி பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், முடிவு செய்யப்பட்டது. மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 450 டவுன் பஸ்கள் வாங்குவதற்கான டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.
இதைத்தவிர, தமிழக அரசு போக்குவரத்து கழகம், தன்னுடைய பஸ்கள் அனைத்தையுமே, புனரமைப்பதற்காக, டெண்டர் விடுக்கப்பட்டது.. இந்த டெண்டரின்படி பஸ்கள் புதுப்பிக்கப்படும்போது, அதற்கு புதிதாக மஞ்சள் நிறம் அடிக்கப்பட முடிவானது... ஏற்கனவே சில்வர் மற்றும் நீல நிறத்தில் இருக்கும் பஸ்கள், இப்போது மஞ்சள் நிறத்திற்கு மாறி வருகின்றன..
போட்டோக்கள்: இது தொடர்பாக கடந்த மாதம், டிஎன்எஸ்டிசி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், மஞ்சள் நிறமாக்கி கொண்டிருக்கும் பஸ்களின் போட்டோக்களை வெளியிட்டிருந்தது. அப்போது வேறு என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட உள்ளோம் என்ற விவரத்தையும் குறிப்பிட்டிருந்தது..
குறிப்பாக, பஸ்களில் தலையணையுடனான படுக்கைகள் அமைக்கப்பட உள்ளது.. பேருந்துகளில் ஏற்கனவே இருந்த யூஎஸ்பி சார்ஜருக்கு பதிலாக சார்ஜிங் பாயிண்டுகள் அமைக்கப்பட உள்ளன.. இருக்கை கவர்களில் துணிகளுக்கு பதிலாக, ரெக்சின்களை கொண்டு சீட் அமைக்கப்படும், ஜன்னல்கள் மற்றும் ரீடிங் லைட்டுகள் தரம் உயர்த்தப்படும், இன்னும் பராமரிப்பில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று அறிவித்திருந்தது.
மஞ்சள் கலர்: இந்நிலையில், பேருந்துகளுக்கு மஞ்சள் நிற பெயிண்ட் அடிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. தமிழகத்தில் விரைவில் இயக்கத்துக்கு இவைகள் வரப்போவதாகவும் கூறப்படுகிறது. சென்னை, பெங்களூரு, திருச்சி, கரூரில் புதிய பஸ்கள் தயாராகி வருகின்றவாம். இவ்வாறு, தமிழகம் முழுதும் உள்ள 8 கோட்டங்களில் முழுபாகம் சேதமடைந்த, ஒழுகும் நிலையில் உள்ள பஸ்கள் சீரமைக்கப்பட உள்ளன.
தமிழகம் முழுதும் பயன்படுத்த, 1,000 புதிய பஸ்களை வாங்கவும், 500 பழைய பஸ்களை புதுப்பிக்கவும், 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பராமரிப்பு பணிகளும் வேகம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கலர் கலர் பஸ்கள்: முன்பு, அதிமுக ஆட்சியில் பச்சை கலரில் பஸ்கள் இயக்கப்பட்டன.. பிறகு, பிஎஸ் 4 ரக பஸ் வருகையால், நீல நிறம் மாற்றப்பட்டது.. இதற்கு பிறகு, இலவச பஸ் என அடையாளம் காண்பதற்காக, பாதி பிங்க் நிறத்தில் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்போது மஞ்சள் நிறமும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications