அசத்தல் அறிவிப்பு.. குண்டா இருப்போருக்கு "குட் நியூஸ்".. ஓடிவந்த போக்குவரத்து கழகம்.. தமிழக அரசு மாஸ்
சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழகம், மக்களின் நலனை கருத்தில்கொண்டு, கூடுதல் பஸ்களை இயக்கி வருகிறது. அத்துடன், முன்பதிவு போன்ற வசதிகளிலும் மாற்றங்களை செய்து வரும் நிலையில், அடுத்த அதிரடியை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு அத்தியாவசிய போக்குவரத்து சேவைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வாயிலாக குறைந்த கட்டணத்தில் அரசு வழங்கி வருகிறது. மேலும், அனைத்து கிராம பகுதிகளுக்கும் பஸ் பயண வசதியை ஏற்படுத்தி, தமிழகம் முழுவதும் தடையற்ற போக்குவரத்து சேவையையும் அளித்து வருகிறது.

பயணச்சலுகை: அத்துடன், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு இலவச பஸ் பயணச்சலுகை, சாதாரண நகர கட்டண பஸ்களில், "மகளிர் கட்டணமில்லா பயணம்" திட்டம், பொதுமக்களின் தேவைக்கேற்ப புதிய பேருந்து வழித்தடங்களை தொடங்கி வைத்தல், பழைய பேருந்துகளை புதுப்பித்தல், புதிய பஸ்கள் கொள்முதல் செய்தல், சூபருந்து பணிமனைகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களையும் தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
அதுமட்டுமல்ல, கடந்தவாரம்கூட தமிழக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதாவது, பெண்களுக்கான கட்டணமில்லா பஸ் பயணத்திட்டமான, விடியல் பயணத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதை மலைப்பகுதியில் உள்ள பெண்கள் அனைவருமே பயனடையுமாறு விரிவுபடுத்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
அத்துடன், மலைப்பகுதிகளிலும், கட்டணமில்லா பஸ்கள் விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் அறிவித்திருந்தார். மலைப்பகுதிகளிலும் இலவச பஸ் என்ற முன்னெடுப்பானது, பல்வேறு தரப்பு மக்களை திரும்பி பார்க்க வைத்தது.
கூடுதல் சீட்கள்: இந்நிலையில், அடுத்த குட்நியூஸ் அறிவித்துள்ளார் தமிழ்நாடு போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர்.. உடல் பருமனானவர்கள் சிரமமின்றி பயணிக்க புறநகர் பேருந்துகளில் 5 இருக்கைகள் குறைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.. அதாவது, அரசு போக்குவரத்து கழகத்தினால் இயக்கப்படும் புறநகர் பஸ்கள், போதிய இடைவெளியின்றி பயணிகள் பயணிக்க மிகவும் சிரமமாக இருந்து வருகிறது.
இதன்காரணமாக, உடல் பருமானான பயணிகள் புறநகர் பேருந்துகளில் நீண்ட தூரம் பயணிப்பது மிகுந்த சிரமத்தையும், உடல் அசதியையும் ஏற்படுத்தி வந்தது.
இது தொடர்பாக கோரிக்கை, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இப்போது, புறநகர் பேருந்துகளில் உடல் பருமனானவர்கள் இலகுவாக பயணிக்க பேருந்துகளில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சி: இதற்கெனவே, ஒவ்வொரு பஸ்ஸிலும், 5 இருக்கைகள் குறைக்கப்படும் என்றும், விரைவில் 4 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். போக்குவரத்துத்துறை அமைச்சரின் இந்த அறிவிப்பு பயணிகள் இடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications